பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் ரூ. 2 கோடிக்கு பருத்தி வர்த்தகம்

Added : ஜன 08, 2020
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், இரண்டு கோடி ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று, பருத்தி ஏலம் நடந்தது. ஆத்தூர், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து, 800 விவசாயிகள், 12 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆத்தூர், கோவை, ஈரோடு, திருச்சி, சேலம் வியாபாரிகள், பருத்தி தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இதில், டி.சி.?ஹச்., ரகம் குவிண்டால் 5,989 முதல், 6,849 ரூபாய், பி.டி., ரகம் குவிண்டால் 4,189 முதல், 5,236 ரூபாய் வரை விற்பனையானது. 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள், இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X