பொது செய்தி

இந்தியா

போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
CrudeOil, PriceRise, America_Iran, War, India, America, Iran, கச்சா_எண்ணெய், விலைஉயர்வு, அமெரிக்கா, ஈரான், போர்அபாயம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை 3.5 சதவீதம், அதாவது ஒரு பீப்பாய் 71 டாலராக உயர்ந்துள்ளது.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்ததையடுத்து அமெரிக்கா, ஈரானுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் கொன்றது. இதனால் இருநாடுகளிடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டு வருகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


latest tamil news


ஈரான் அருகேயுள்ள ஹோர்மூஸ் ஜலசந்திதான் உலகில் 40 சதவீதம் எண்ணெய் வர்த்தகம் நடக்கும் இடம். மேலும், தாக்குதல் நடந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அதிகரித்து 71 டாலராக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் உயரும் என கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால், கச்சா எண்ணெய் விலை உயர்வை உலக நாடுகள் அனுமதிக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
08-ஜன-202021:25:42 IST Report Abuse
jagan எண்ணெய் விலை இன்னும் உயர்ரத்த வேண்டும். வெப்ப மயமாதல் தடுக்க படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
08-ஜன-202021:14:12 IST Report Abuse
Subramanian Sundararaman போர் மூண்டால் முதலில் கவலைப்படவேண்டியது , வளைகுடா நாடுகளில் வசிக்கும் லக்ஷ கணக்கான மக்களை பத்திரமாக எப்படி இந்தியாவிற்கு கொண்டுவருவது என்பதுதான் . அவர்களுக்கு வேலைவாய்ப்பை எப்படி தரப்போகிறோம் ? அந்தப் போர் பகுதியில் கடல் வழி ஏற்றுமதி பாதிக்கப்படும் . அது இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் . அதை எப்படி சமாளிக்க போகிறோம் ? பாதிக்கப்போகும் கடல் வழி தவிர்த்து எப்படி கட்சா எண்ணையை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் போகிறோம் ? அந்த கடுமையான விலை உயர்வு ,போக்குவரத்து செலவை அதிகப்படுத்தி எல்லா பொருள்களின் விலையையும் அதிகரிக்க செய்யும் . அமெரிக்க அதிபர் டிரம்ப் 2021 தேர்தலில் வெற்றிபெற வகுக்கும் போர்யூகம், வளைகுடா நாடுகளை எரிபொருளுக்கு நம்பியிருக்கும் உலக நாடுகளை குறிப்பாக இந்தியாவை கடுமையாக பாதிக்கும் .ஆனால் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு எரிபொருளின் வரியை குறைக்காது . சீனாவின் கை ஓங்கும் . இந்தியாவுக்கு கடுமையான சோதனைக் காலம் .
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
08-ஜன-202021:05:19 IST Report Abuse
ராம.ராசு கச்சா எண்ணெய் விலை 112 அமெரிக்க டாலராக 2014 ஏப்ரலில் இருந்த போது பெட்ரோல் விலை ரூபாய் 70 க்குள் உள்ளே இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை 68 அமெரிக்க டாலர்தான். இப்போது பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ரூபாய் 80 நெருங்கிவிட்டது. கச்சா எண்ணெய் குறைவாக இருந்தபோதும் எரிபொருட்களின் விலை ஏறிக்கொண்டுதான் இருந்தது. இருக்கிறது. இப்போதோ கச்சா எண்ணெய் விலை ஏறப்போகிறது என்ற செய்தியே போதுமானதாக இருக்கும்... விலை ஏற்றம் செய்ய. அது அமெரிக்க டாலர் 90 100 க்கு மேலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை வரும் 70 , 80 என்ற அளவில் ஏற்றம் என்றாலும் பெட்ரோல் விலை ரூபாய் 100 த் தாண்டினாலும் ஆச்சரியமில்லை. மக்கள் எத்தனையோ ஏற்றங்களை ஏற்றுக் கொண்டுதான் உள்ளார்கள். பத்தோடு இது பதினொன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X