டில்லி போலீசை 2 நாள் எங்களிடம் கொடுங்கள்: கெஜ்ரிவால்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி போலீசை 2 நாட்கள் எங்களிடம் கொடுங்கள். அவர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



latest tamil news


டில்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம்ஆத்மி, பா.ஜ., காங்., கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தியா டுடே நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், 5 ஆண்டுகளுக்கு முன் சாமானியர்களாக இருந்த எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டளித்தனர். 5 ஆண்டுகளாக இரவு பகலாக நாங்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம்.
அனைத்து பணிகளும் உரிய நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வேகமாக பணியாற்றினாலும் துணைநிலை கவர்னர் அலுவலகத்தில் கோப்புகள் விரைவில் நகர்வதில்லை. கவர்னர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அழுத்தம் வந்து கொண்டே இருக்கும்.


latest tamil news



டில்லி வளர்ச்சிக்காக பா.ஜ., அரசு ஏதும் செய்யவில்லை. பா.ஜ., ஆளும் அரியானா, உ.பி., போன்ற மாநிலங்களிலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மத்திய அரசு எங்கள் பணிகளை தடுக்க நினைத்தால் தொடர்ந்து போராடி, அதை நிறைவேற்றுவோம். டில்லி போலீசாரை நான் குற்றம் சொல்ல மாட்டேன். மேலிடத்தை உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். 2 நாட்கள் டில்லி போலீசை எங்கள் கட்டுப்பாட்டிற்கு விடுங்கள். பின் பாருங்கள் அவர்கள் எவ்வாறு சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்று. நேர்மையான அரசின் கீழ் மட்டுமே ஊழியர்களால் சிறப்பாக பணியாற்ற முடியும்.
எங்களுக்கு தேர்தலை கண்டு பயமில்லை. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஊழல் இல்லாமல் அரசின் செயல்பாடுகளை குறித்து மக்கள் பேசும் தேர்தலாக இது இருக்க போகிறது. நாங்கள் ஜாதி அல்லத மதம் இல்லாமல் அரசு பணிகளை வைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-202004:02:16 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் எப்படி முதல்வர் ஆனார்கள் என்று ஆச்சர்யப்பட வைத்தவர்களில் ஒருவர், இந்த கேஜரிவால். மற்றவர் புதுவை நாராயணசாமி. இவர்களால் எல்லோருக்கும் முதல்வராகும் கனவு.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
09-ஜன-202002:33:20 IST Report Abuse
kumzi அப்புடியே குட்டி பாக்கிஸ்தானா மாத்திருவ அது தானே உன்னோட நோக்கம்
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-202001:40:26 IST Report Abuse
Indian Dubai HE IS A REAL JOKER
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X