சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் வேனில் 'டிக்டாக்': சிறுவர்களுக்கு நூதன தண்டனை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
TikTok, Youngsters, Punishment, Police, போலீஸ், டிக்டாக், இளைஞர்கள், போக்குவரத்து,தண்டனை, தூத்துக்குடி

இந்த செய்தியை கேட்க

தூத்துக்குடி: போலீஸ் வாகனத்தின் மீது ஏறி டிக்டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இளைஞர்களுக்கு தூத்துக்குடி போலீசார் நூதன தண்டனை விதித்தனர்.
டிக்டாக் செயலியில் நடிப்பு திறமையை காண்பிப்பதாக நினைத்து இன்றைய தலைமுறையினர் ஒருவித மாயையில் வாழ்ந்து வருகின்றனர். வித்தியாசமாக ஏதாவது செய்தால் தான் 'லைக்' வரும் என ஏதாவது செய்து மாட்டிக் கொள்கின்றனர்.

பலரின் குடும்பங்களும் சீரழிந்து வருவதை கூட விழிப்புணர்வாக எடுத்துக் கொள்ளாமல் நாளுக்குநாள் டிக்டாக் மோகத்தில் மூழ்கி வருகின்றனர். இதுபோன்று பின்விளைவுகளை யோசிக்காமல் செய்த டிக்டாக் வீடியோவால் தூத்துக்குடியை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஒர்க்ஷாப்பில் ரிப்பேருக்கு வந்த போலீஸ் வாகனத்தில் ஏறி நின்று டிக்டாக் வீடியோ வெளியிட்ட 3பேருக்கு, 8 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தண்டனை வழங்கினர், காவல்துறையினர்.


latest tamil news


தூத்துக்குடி ஆயுதப்படை அலுவலகம் முன்பாக நிறுத்தியிருந்த போலீஸ் வாகனத்தின் மீது 3 சிறுவர்கள் ஏறி வசனம் பேசி நடித்து டிக்டாக் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதனைக் கவனித்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், முனியாசாமிபுரம் பகுதியை சேர்ந்த பிஏ மாணவர் சேகுவாரா மற்றும் இரு சிறுவர்கள் வித்தியாசமாக வீடியோ வெளியிட விரும்பி இதுபோல் செய்ததாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் பணி என்பது எவ்வளவு சிரமமானது என்பதை உணர வைக்க வேண்டும் என நூதன தண்டனை விதித்தனர். அதாவது, 3 இளைஞர்களும் மார்க்கெட் சிக்னலில் இன்று (ஜன.,08) காலை 9 மணி முதல் எட்டு மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் பணியை தென்பாகம் போலீசார் வழங்கி நூதன தண்டனை விதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
09-ஜன-202005:17:37 IST Report Abuse
ராஜேஷ் தரமான சம்பவம் . இந்த மாதுரி பணியை பள்ளிமாணவர்களுக்கும் கட்டாயமாக்கினால் . போக்குவரத்து விதிமீறல்கள் மிக குறைந்துவிடும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-202003:58:15 IST Report Abuse
J.V. Iyer நல்ல தீர்ப்பு. இளைஞர்களுக்கு புத்திவந்து திருந்துவார்கள் என்று நம்புவோமாக.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
08-ஜன-202019:21:59 IST Report Abuse
LAX இந்த நூதன தண்டனையை எதிர்த்தும் சிலர் போராடாதது அதிசயமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X