அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே பந்தில் 9 ரன் அடிப்பார் முதல்வர்: அமைச்சர் 'ஐஸ்'

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (32)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பான விவாதத்தின் போது, அதிமுக - திமுக இடையே காரசார விவாத நடைபெற்றது. திமுக உறுப்பினர் துரைமுருகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டியதை அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.







ஜெ.,வை பாராட்டிய துரைமுருகன் :


சட்டசபையில் இன்று நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதா, கருணாநிதி இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை என்றார். திமுக துரைமுருகன் பேசுகையில், ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அவரது செயல்பாட்டையும், உறுதியையும் பாராட்டுகிறேன் என்றார். துரைமுருகனின் இந்த பேச்சை அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.





காரசார விவாதம் :


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரே பந்தில் 9 ரன்கள் அடிக்கக் கூடியவர் முதல்வர். எதிர்க்கட்சிகளுக்கு அரசின் செயல்பாடுகளை பாராட்ட மனமில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட திமுக துரைமுருகன், அரசின் குற்றம், குறைகளை கூறவே வந்தோம். பாராட்டுவதற்கு வரவில்லை என்றார். அதற்கு பதிலளித்த விஜயபாஸ்கர், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என அண்ணாதுரையே கூறி உள்ளார் என்றார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், மல்லிகையாக இருந்தால் பரவாயில்லை. காய்ந்து போன மலராக இருந்தால் என்ன செய்ய முடியும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
08-ஜன-202017:17:58 IST Report Abuse
Anantharaman Srinivasan மதுரை மல்லியாய் இருந்தால் மணம் இருக்கும். பாராட்டலாம். முல்லை அல்லவோ ஆள்கிறது. டெல்லியில் இருந்து ஒரே No Ball போட்டால் ஆட்டம் க்ளோஸ்.
Rate this:
Share this comment
Ganesh G - Hyderabad,இந்தியா
08-ஜன-202019:32:18 IST Report Abuse
Ganesh Gநோ பால் ல அவுட் ஆனா அவுட் கிடையாது...
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202017:15:55 IST Report Abuse
rajesh குட்கா புகழ் அமைச்சர் சற்று அதிகமாக குட்கா சாப்பிட்டதால் நாக்கு குளறி உளறுகிறார்
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
08-ஜன-202017:00:48 IST Report Abuse
பிரபு ஒரே பந்தில் 9 ரன்கள் அடிப்பாரா? அப்போ பந்து வீசுனது யாரு?
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
08-ஜன-202018:23:21 IST Report Abuse
s.rajagopalan9 ரன்கள் அடிப்பாரா ? அதே போல்தான் நீட் தேர்வும் தமிழ் நாட்டில் வரமுடியாமல் அரசு தடுக்கும் என்னமா புருடா விட்றானுங்க...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
08-ஜன-202019:33:08 IST Report Abuse
Rajasஅதை விட அம்பெயர் யார் என்று கேளுங்கள். வேண்டியவர்களுக்கு பேட்டில் பால் பட்டால் கூட வைட் என்பார். வேண்டாதவர்களுக்கு பால் வீசுவதற்கு முன்னாலே அவுட் கொடுப்பார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X