பொது செய்தி

தமிழ்நாடு

கண்டன பேரணி ஆர்ப்பாட்டம்

Added : ஜன 08, 2020
Advertisement

குமாரபாளையம்: குடியுரிமை சட்ட திருத்த மசோதா கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் குமாரபாளையத்தில் நடந்தது. நகர, காங்., தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். நகராட்சி அலுவலகம் முன் துவங்கிய பேரணி, சேலம் சாலை வழியாக பள்ளிபாளையம் பிரிவில் நிறைவு பெற்றது. காங்., மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால் பேரணியையும், தி.மு.க., துணை செயலர் சேகர் ஆர்ப்பாட்டத்தையும் துவக்கி வைத்தனர். ம.தி.மு.க., நகர செயலர் விஸ்வநாதன், இரு கம்யூ., நகர செயலர்கள் கேசவன், ஆறுமுகம், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X