பொது செய்தி

தமிழ்நாடு

சமயசங்கிலியில் கரும்பு அறுவடை தீவிரம்

Added : ஜன 08, 2020
Advertisement

பள்ளிபாளையம்: சமயசங்கிலி பகுதியில், கரும்பு அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், பொங்கல் பரிசாக, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் உள்பட பல பொருட்களுடன், கூடுதலாக கரும்பும் வழங்கப்படுகிறது. இதனால், கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளிபாளையம் அடுத்த சமயசங்கிலி, கரமேடு, தொட்டி பாளையம், பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள், பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில், 250 ஏக்கருக்கும் மேல், கரும்பு சாகுபடி செய்துள்ளனர். பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. ரேஷன் கடை மூலம் மக்களுக்கு வழங்க, நாமக்கல், ஈரோடு, மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வரும் அதிகாரிகள், இப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களை நேரடியாக வந்து பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால், கரும்பு அறுவடை பணிகள் சமயசங்கிலியில் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பகுதியில் செல்லும் அனைத்து சாலைகளிலும் கரும்பு லாரிகளின் போக்கு வரத்து உள்ளது. அந்தளவுக்கு கரும்பு அறுவடை பரபரப்பாக நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X