பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் ரங்கநாயகி தாயாருக்கு இன்று முதல் தினசரி அபிஷேகம்

Added : ஜன 08, 2020
Advertisement

நாமக்கல்: 'நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், இன்று முதல் அரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி தாயாருக்கு தினசரி அபி ?ஷகம் நடைபெறும்' என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆன்மிக இந்து சமயப் பேரவை கவுரவத் தலைவர் சோழாஸ் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரங்கநாதர் கோவிலில், ரங்கநாயகி தாயாருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, தினசரி காலை, 7:00 முதல், 1:00 மணி வரை, மாலை, 4:00 முதல், 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். தகவலுக்கு, 04286-233999, 94430 25272 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, இந்து சமய அறநிலையத்துறைக்கும், அர்ச்சகர்களுக்கும் ஆன்மிக இந்து சமயப் பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X