பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை வேளாண்மை பொருட்கள் உற்பத்தி: அங்ககச்சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

நாமக்கல்: அங்கக வேளாண்மை எனப்படும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் அங்கக சான்றளிப்பு, மத்திய அரசின் அங்கக வேளாண் செயல் திட்டத்தின்படி செயல்படுத்தப்படுகிறது. நுகர்வோர் நம்பிக்கையுடன் இடுபொருட்களை வாங்க அங்ககச் சான்று முக்கியம். அங்கங்க வேளாண் சாகுபடி செய்யும் பண்ணை தனிமை பெற்றிருக்கவேண்டும். சான்று செய்யப்படவுள்ள பயிர் விதைப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேசிய அங்கக உற்பத்தி தரங்கள் பராமரிக்கப்பட்டு இருக்கவேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்களாக குறைந்தது, 12 மாதங்கள் காத்திருக்கும் காலத்திற்கு பின்னர் தான் சான்று வழங்கப்படும். வேளாண்மைக்கு பண்ணை இடுபொருட்களை பயன்படுத்த வேண்டும். இயற்கை உரம், தாவர பூச்சிக்கொல்லிகளை பண்ணைகளுக்கு வெளியில் இருந்து வாங்கும் போது உரிய ஆவணங்கள் காட்டப்பட வேண்டும். சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பப்படிவம், மூன்று நகல், பண்ணையின் பொது விபர குறிப்பு, 3, பண்ணை வரைபடம், மண் வாசனை நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், நில ஆவணம், ஆதார் நகல் மற்றும் புகைப்படம் ஆகிய விபரங்களுடன் பதிவு ஆய்வு மற்றும் பயண நேரக் கட்டண தொகையாக, சிறு குறு விவசாயிகளாக இருப்பின், 2,700, பிற விவசாயிகள், 3,200, குழுவிற்கு, 7,200, வணிக நிறுவனங்கள், 9,400 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு, நாமக்கல் விதைச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X