பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜன 08, 2020
Advertisement

குடியிருப்பு அருகே தண்ணீர் தேக்கம்: எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி பஞ்., சின்னமாணிக்கம்பாளையம் ஏரியில் இருந்து வரும் உபரிநீர், பல வாரங்களாக அங்குள்ள குடியிருப்புகள் அருகே தேங்கி நிற்கிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாவதால், அருகில் வசிப்போர் அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கழிவுநீரை அகற்ற வேண்டும்.
வாய்க்கால் முட்புதர் அகற்றப்படுமா? எலச்சிபாளையம் ஒன்றியம், திம்மராவுத்தம்பட்டியிலிருந்து, உஞ்சனைக்கு செல்லும் வாய்க்காலில் பல மாதங்களாக முட்புதர் ஆக்கிரமித்துள்ளது. இதனால், தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளதுடன், விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அருகில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, முட்புதரை அகற்ற, சம்பந்தப்பட்ட பஞ்., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகாரளித்தும் பலனில்லை.

பாதாள சாக்கடை குழாய் உடைப்பு: நாமக்கல், பூங்கா சாலையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழியில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து கசியும் கழிவுநீரால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்படைகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்துள்ளனர். விபத்து வாய்ப்பும் அதிகரித்துள்ளது. எனவே, பாதாள சாக்கடையை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி: குமாரபாளையம் அருகே, பள்ளிபாளையம் சாலை எம்.ஜி.ஆர்., நகர் பஸ் நிறுத்தம் அருகே அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. அப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், அங்குள்ள பள்ளத்தில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. பலருக்கும் தொற்று நோய் பரவ காரணமாக இருக்கும் இந்த கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான சாக்கடை; விபத்து வாய்ப்பு: ராசிபுரத்தில் இருந்து, சேலம் செல்லும் பிரதான சாலையில், இரண்டு பக்கமும் சாக்கடை அமைந்துள்ளது. இதில், மாதா கோவிலை தாண்டியவுடன் வரும் வளைவில் சாலையை ஒட்டியே சாக்கடை அமைந்துள்ளது. கழிவுகளை அள்ள வசதியாக மேலே போட்டிருந்த கல்லை அகற்றி விட்டனர். தற்போது, கான்கிரீட் சுவரும் உடைந்து அகலமாகிவிட்டது. வாகனங்கள் நெருக்கமாக செல்லும் இந்த சாலையில் கவனக்குறைவாக நடந்து மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து விடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X