பொது செய்தி

தமிழ்நாடு

5.07 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 08, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2020ம் ஆண்டு, பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில், இம்மாவட்டத்துக்கு, 5,07,415 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத்தொகுப்பு (ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டடி நீளக்கரும்புத் துண்டு) மற்றும் ரொக்கம், 1,000 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு, நாளை (ஜன., 9) முதல் துவங்கி, வரும், 12க்குள் வழங்கப்படும். இந்த தேதிகளில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை பெறாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வரும், 13ல் வழங்கப்படும். மின்னணு ரேஷன் கார்டு மூலமாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். மின்னணு ரேஷன் கார்டு சேதமடைந்திருந்தாலோ அல்லது தொலைந்திருந்தாலோ, அட்டையில் உள்ள நபர்களின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும், 'ஒரு முறை கடவுச் சொல்' மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். மேலும், ரேஷன் கடைகளில், சுழற்சி முறையில், தெரு வாரியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது குறைகள் இருந்தால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, 04286 - 281116 என்ற, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X