திருமுறைக்கழகம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமுறைக்கழகம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி இன்று துவக்கம்

Added : ஜன 08, 2020

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, திருமுறைக்கழகத்தின், ஆன்மிக நிகழ்ச்சிகள் இன்று துவங்குகின்றன. குமாரபாளையம் அடுத்த பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் திருமுறைக்கழக ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுவது பழக்கம். அதன்படி, இந்தாண்டு நிகழ்ச்சி, இன்று துவங்குகிறது. முதல்நாள், 'எழுதுமறை மொழிந்த பிரான்' எனும் தலைப்பிலும், நாளை, 'இன்பமே எந்நாளும்' எனும் தலைப்பிலும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 10ல், திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு, 'சரணாகதி' எனும் தலைப்பிலும் பேச உள்ளார். ஜன., 11ல் 'திருத்தொண்டர் புராணம் பக்திக்கு வித்தா? தொண்டுக்கு துணையா? எனும் தலைப்பில், நடுவர் மாது தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. வரும், 12ல் ரமணபாரதி எனும் க்ரிஷ்ண ஜகந்நாதன், 'திருமந்திரத்தேன்' எனும் தலைப்பிலும், சேலம் கலையமுதன், 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' எனும் தலைப்பிலும் பேச உள்ளனர். ஜன., 15ல் கடைசி நிகழ்ச்சியாக, சேலம் ஜதி ஸ்வரம் அபர்ணா ரமேஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X