சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுவில் விஷம் கலப்பு: மருத்துவமனையில் இருவர் அனுமதி

Added : ஜன 08, 2020
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, கபிலர்மலை அடுத்த, இருக்கூரை சேர்ந்தவர்கள் தியாகராஜன், 35, செந்தில்குமார், 40, சரவணன், 44, சுப்பையாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 52. நால்வரும் கடந்த, 30ல், இருக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமர்ந்து மது அருந்தினர். சிறிதுநேரத்தில் தியாகராஜன் மற்றும் செந்தில்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தற்போது, கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தியாகராஜன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'எங்கள் இருவருக்கும், ஆறுமுகம் மற்றும் சரவணன் மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர்' என, கூறினார். இதையடுத்து, பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஆறுமுகத்தை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 'ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்க கூடும்' என தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X