இருக்கைகளில்லாத நிழற்கூடம்: பயணிகள் கடும் அவதி

Added : ஜன 08, 2020
Advertisement

நாமகிரிப்பேட்டை: க.வெள்ளாளப்பட்டியில், இருக்கைகளில்லாத நிழற்கூடத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர். நாமகிரிப்பேட்டையில் இருந்து, பேளுக்குறிச்சி செல்லும் வழியில் க.வெள்ளாளப்பட்டி பிரிவு உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து, பேளுக்குறிச்சி அல்லது நாமகிரிப்பேட்டை வருவது என்றால் பிரிவு சாலைக்கு வந்து அங்கிருந்துதான் பஸ்களில் வரமுடியும். எனவே, இப்பகுதியில் காலை, மாலை உள்ளிட்ட அலுவலக நேரங்களில் பயணிகள், மாணவர்கள் கூட்டம் இருக்கும். எனவே, பயணிகள் வசதியாக, 20 ஆண்டுகளுக்கு முன் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்த இருக்கைகளை மர்ம நபர்கள் உடைத்துவிட்டனர். வயதானவர்கள், பெண்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியுள்ளது. நிழற்கூடத்தில் இருக்கைகள் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X