பொது செய்தி

தமிழ்நாடு

நெருங்கும் பொங்கல் பண்டிகை: நுகர்வு சரிந்து முட்டை விலை குறைப்பு

Added : ஜன 08, 2020
Share
Advertisement

நாமக்கல்: பொங்கல் பண்டிகையையொட்டி, நுகர்வு சரிந்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை, இரண்டு நாளில், 25 காசு குறைந்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த, 1ல் கொள்முதல் விலை, 448 காசாக நிர்ணயிக்கப்பட்டது. 2ல், 453 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 3ல், 10 காசு குறைக்கப்பட்டு, 443; 5ல், 15 காசு சரிந்து, 428 என, அதிரடியாக குறைக்கப்பட்டது. இரு நாட்களில், 25 காசு சரிந்துள்ளது.

தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால், வீடுகளில் வெள்ளையடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் முட்டை சமைப்பது நிறுத்தப்படும். அதனால், முட்டை நுகர்வு, 10 சதவீதம் குறைந்துள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X