பொது செய்தி

தமிழ்நாடு

இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு சடங்கு செய்த கிராம மக்கள்

Added : ஜன 08, 2020
Advertisement

தர்மபுரி: பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்ற காளை இறந்ததால், அதற்கு சடங்குகள் செய்து, கிராம மக்கள் அடக்கம் செய்தனர். தர்மபுரி அடுத்த, சவுக்குதோப்பை சேர்ந்தவர் மாது, 46; விவசாயியான இவர், கடந்த, 10 ஆண்டுகளாக கருப்பன் என, பெயரிட்ட ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். இது தர்மபுரி, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும், எருது விடும் விழாவில் பங்கேற்று, பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்ட காளை நேற்று காலை, 8:30 மணிக்கு இறந்தது. இதையறிந்த கிராம மக்கள், மாது வீட்டின் முன் குவிந்தனர். பின், இறந்த மனிதர்களை அடக்கம் செய்யும்போது செய்யப்படும் அனைத்து சடங்குகளையும், காளைக்கு செய்தனர். பின், மாதுவின் விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி, இறந்த கருப்பன் காளையை அடக்கம் செய்தனர். பொங்கல் நெருங்கும் நேரத்தில், காளை இறந்ததால், கிராம மக்கள் வேதனையடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X