சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி விவசாயி பலி: பொதுமக்கள் சாலை மறியல்

Added : ஜன 08, 2020
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, யானை தாக்கி விவசாயி பலியானதால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், 70க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. பயிர்களை யானைகளிடமிருந்து காப்பாற்ற, விவசாயிகள் இரவு காவலுக்கு செல்வது வழக்கம். அதன்படி, தேன்கனிக்கோட்டை அடுத்த சாப்ரானப்பள்ளியை சேர்ந்த விவசாயி சுரேஷ், 34, நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை, 8:30 மணிக்கு கிராம மக்கள் மற்றும் சுரேஷ் உறவினர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். வனத்துறையை கண்டித்தும், விவசாயிகளை யானைகள் தொடர்ந்து தாக்குவதால், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வலியுறுத்தியும், தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், வனத்துறை சோதனைச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 10:30 மணிக்கு மேலாகியும், மறியல் தொடர்ந்ததால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஓசூர், ஆர்.டி.ஓ., குமரேசன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களை கலைந்து போகச்செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X