சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு விபத்தில் இரண்டு பேர் பலி

Added : ஜன 08, 2020
Advertisement

ஓசூர்: ஓசூர், சூளகிரி அருகே நடந்த வெவ்வேறு விபத்தில், இருவர் பலியாகினர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு சாமன்னா நகரை சேர்ந்தவர் தன்வீர்கான், 23. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு ஹோண்டா பைக்கில், தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். முதுகானப்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


* கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தேவர்குட்டப்பள்ளியை சேர்ந்தவர் முனுசாமி மனைவி எல்லம்மா, 72. இவர், சின்னாறு தேசிய நெடுஞ்சாலையோரம், சீத்தாப்பழம் விற்பனை செய்து வந்தார். நேற்று காலை, 7:30 மணிக்கு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை, சின்னாறு பகுதியில் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ், எல்லம்மா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X