பொது செய்தி

தமிழ்நாடு

திருநள்ளாறில் தி.மு.க., கவுன்சிலர்கள்; சாமுண்டீஸ்வரியை தரிசித்த பா.ம.க.,வினர்

Added : ஜன 08, 2020
Advertisement

மேட்டூர்: கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, போட்டியிட்டு வெற்றி பெற்ற, தி.மு.க., கவுன்சிலர்கள் புதுச்சேரியில் முகாமிட்டுள்ள நிலையில், பா.ம.க., கவுன்சிலர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் பதவி இட ஒதுக்கீடு அடிப்படையில் எஸ்.சி.,க்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில், 12 கவுன்சிலர் பதவிகளில், அ.தி.மு.க., 3, பா.ம.க., 3, தி.மு.க., 4, சுயேச்சை, 2 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க., - பா.ம.க.,வில், எஸ்.சி., கவுன்சிலர்கள் இல்லை. ஆனால், தி.மு.க.,வில் பழனியப்பன், புவனேஸ்வரி என இரு கவுன்சிலர்கள் உள்ளனர். இதனால், அ.தி.மு.க., கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றிய போதிலும், தலைவர் பதவியை தி.முக., கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கொளத்தூரில் கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேரையும், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், சேலம் எம்.பி., பார்த்திபன் காரில் அழைத்து சென்று விட்டனர். பா.ம.க., கவுன்சிலர்கள், மூன்று பேர், ஒரு சுயேச்சை கவுன்சிலர் சின்னப்பன், மற்றொரு சுயேச்சை கவுன்சிலர் கலைவாணியின் கணவர் முருகன் உள்பட, ஐந்து பேர் கர்நாடகாவுக்கு சென்று விட்டனர். தற்போது, தி.மு.க., செயலாளர் சிவலிங்கம், எம்.பி., பார்த்திபன் சேலத்தில் உள்ள நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டும் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். நேற்று, தி.மு.க., கவுன்சிலர்கள் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த நிலையில், கர்நாடகாவில் முகாமிட்டுள்ள, பா.ம.க., கவுன்சிலர்கள் மைசூரு, சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபாடு செய்தனர். இரு தரப்பினரும் வரும், 11ல் நடக்கும் தலைவர் தேர்வுக்கு கொளத்தூர் திரும்புவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X