பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினியின் கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ போலீஸ் அனுமதி மறுப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

சேலம்: சேலத்தில், ரஜினியின் தர்பார் படம் திரையிடப்படும் தியேட்டரில் வைக்கப்படும், 'கட் அவுட்'களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ, போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் 'தர்பார்' திரைப்படம், நாளை சேலத்தில் வெளியாகிறது. சேலம், புதுபஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, மல்டிபிளக்ஸ் தியேட்டரில் திரையிடப்படுகிறது. ரஜினிகாந்தின் மெகா கட் அவுட்கள், தியேட்டர் முன் வைக்கப்படுகின்றன. அதற்கு ?ஹலிகாப்டர் மூலம் மலர் தூவ, சேலம் ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்தது. இதற்காக, ரஜினி ரசிகர் கனகராஜ் தலைமையில் ரசிகர்கள், சேலம் கலெக்டர் அலுவலகம், தீயணைப்பு துறை, மின்சார துறை, போலீஸ், அரசு கட்டட பொறியாளர், ஏர்போர்ட் ஆகிய ஆறு துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி உள்ளனர்.

இது குறித்து கனகராஜ் கூறியதாவது: ரஜினி நடித்து வெளியாகும், ஒவ்வொரு படத்தின் போதும் கட் அவுட் வைத்து பால் அபி ?ஷகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். 2001ல், அரசியலுக்கு வரக்கோரி திருப்பதிக்கு பாத யாத்திரை, 2013ல் ரஜினிக்கு ஆயுள் அதிகரிக்க வேண்டி சேலம் கோவில்களில் யாகம் நடத்தினேன். தற்போது, ரஜினிக்கு வித்தியாசமான பாராட்டை தெரிவிக்க நானும், எனது நண்பர்கள் குரால்நத்தம் சந்திரசேகர், குளோபல் வெங்கட் ஆகியோர் சேர்ந்து, நாளை சேலம், மல்டி பிளக்ஸ் தியேட்டரில் வெளியாகும், 'தர்பார்' படத்துக்காக, தியேட்டரின் வெளியில் மெகா கட் அவுட் வைத்து, வானில் இருந்து மலர் தூவ ஏற்பாடு செய்துள்ளோம். பெங்களூருவில் உள்ள, டாவன்கேர்சுகர் என்னும் தனியார் ?ஹலிகாப்டர் நிறுவனத்திடம் பேசினோம். மலர் தூவ அரசு துறைகளின் அனுமதியுடன், ஐந்து லட்சம் ரூபாய் கட்டணமாக கேட்டனர். கட்டணம் செலுத்த தயாராக உள்ளோம். அதே நேரத்தில் அரசு துறைகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். கலெக்டர் அலுவலகம், மின்சார துறை, தீயணைப்பு துறையின் அனுமதி கிடைத்துள்ளது. பிற துறைகளின் அனுமதியும் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், ரஜினி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து, ?ஹலிகாப்பரில் இருந்து மலர் தூவ அனுமதி மறுத்துள்ளது.

சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் தங்கதுரை கூறியதாவது: வானில் இருந்து ?ஹலிகாப்டரில் மலர் தூவும் பட்சத்தில், பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதங்களும் அரங்கேற வாய்ப்புள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு, ?ஹலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி மறுக்கப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். போலீஸ் அனுமதி மறுத்துள்ளதால், காமலாபுரம் ஏர்போர்ட் நிர்வாகமும், ?ஹலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி மறுத்து, அதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X