பொது செய்தி

இந்தியா

மகள் திருமண காருக்கு மாட்டுச்சாண 'கோட்டிங்': டாக்டர் வினோதம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (37)
Advertisement
Car, CowDung, Coating, Maharashtra, Doctor, Daughter, மாட்டுசாணம், கோட்டிங், கார், டாக்டர், திருமணம்,

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிராவில் மகளின் திருமண காரை மாட்டுச் சாணத்தால் 'கோட்டிங்' கொடுத்த டாக்டரின் வினோத செயல் வைரலாக பரவி வருகிறது.

மஹா., மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்த டாக்டர் நவ்நாத் டுதால் என்பவர் தனது மகளின் திருமணத்தில் எதையாவது வித்தியாசமாக செய்ய திட்டமிட்டார். இதற்காக திருமண காரை மாட்டு சாணத்தால் 'கோட்டிங்' கொடுத்துள்ளார். இந்த காரை திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர். மகள் மற்றும் மருமகனை அந்த காரிலேயே அழைத்து வந்து, திருமணமும் நடத்தி வைத்துள்ளார்.
இதற்கு நவ்நாத் டுதால் வெளியிட்ட காரணங்கள் மேலும் ஆச்சரியப்படுத்தின. அதாவது மாட்டு சாணத்தின் நன்மைகளை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்கும், அதன் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதற்கும் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.




மேலும், அவர் கூறுகையில், உலக வெப்பமயமாதலின் ஆபத்துகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பசுக்களின் பங்கு முக்கியமானது. மாட்டு சாணத்தால் கேன்சரை குணப்படுத்த முடியும் மற்றும் மனித உடலில் இருந்து நோய்களை அகற்றும் திறன் உள்ளது. காரில் மாட்டு சாணத்தால் 'கோட்டிங்' செய்தால், கார் கேபினின் வெப்பநிலை குறையும் என்பதால் இவ்வாறு செய்தேன். இது, செல்போன் கதிர்வீச்சில் இருந்தும் காப்பாற்றும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
10-ஜன-202006:16:47 IST Report Abuse
மணி ஒன்னும் தப்பில்லை...மாட்டு சாணமல்ல மனுஷ சாணம்கூட அடிச்சுக்கலாம் அவன் காரு அவன் விருப்பம்..
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-ஜன-202020:47:23 IST Report Abuse
Vena Suna அவன் கல்யாணம் பண்ணும் போது புது கார்.. அவன் மாப்பிளையை மாட்டு சாண கார்ல அழைப்பு ...அநியாயம்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜன-202000:39:46 IST Report Abuse
தமிழ்வேல் உஷ்ணம் தனியா, கட்டில்லேயும் சாணம் மொழுகி இருக்குமா......
Rate this:
Share this comment
Cancel
Karthikeyan - Madurai,இந்தியா
08-ஜன-202020:35:30 IST Report Abuse
Karthikeyan என்ன மூளை..நீயெல்லாம் இங்க இருக்கவேண்டிய ஆளே இல்ல.. நாசா காரன் இத கேள்விபட்டான்னா உன்னை அப்படியே தூக்கிபோயிடுவான்.. .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X