பொது செய்தி

இந்தியா

மத்திய பட்ஜெட்: மக்கள் கருத்து கூறலாம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (87)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பொது மக்கள் கருத்து தெரிவிக்குமாறு பிரதமர் மோடி டுவிட்டரில் கேட்டுள்ளார்.


2020-21 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்.,1 அன்று பார்லி.,யில் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி இன்று பதிவிட்டுள்ள டுவீட்டில்,

" மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களையும், இந்தியாவின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மக்கள் MyGov இணையதளம் மற்றும் ஆப்-ல் தங்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பட்ஜெட் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பெறும் பணியில் மத்திய நிதியமைச்சகமும் இறங்கி உள்ளது. குறிப்பாக விவசாயம் மற்றும் கல்வித்துறை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றிய உங்களின் கருத்துக்களை கூறுங்கள் என மத்திய அரசு கேட்டுள்ளது.
கருத்துகளை தெரிவிக்க வேண்டிய இணைய முகவரி: https://www.mygov.in/group-issue/inviting-ideas-and-suggestions-union-budget-2020-2021/

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜன-202000:34:25 IST Report Abuse
தமிழ்வேல் பேசாம பசும்பாலில் தங்கம் எடுக்கிறவரை பட்ஜெட் மினிஸ்டர் ஆக்கிடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
09-ஜன-202000:20:03 IST Report Abuse
Aarkay டியூஷன் எடுப்பவர்கள், டாக்டர்கள், வெள்ளைத்தாளில் பில் போட்டுத்தரும் மளிகைக்கடைகள், முக்கியமாய் பிரியாணி கடைகள் இவற்றை வரி வரம்புக்குள் கொண்டு வாருங்கள் பணப்பரிவர்தனைகள் black money-ஐ ஊக்குவிப்பதால், மாதம் ரூ. 5000/- மட்டுமே இனி தனி நபர் பணப்பரிவர்த்தனை செய்யலாம் எனவும், மற்ற பரிமாற்றங்களனைத்தும் வங்கிகளின் வழியாக மட்டுமே நடக்கவேண்டும் எனவும் எனவும் கொண்டு வரவேண்டும். வங்கிக்கடன் வழங்கல், வாராக்கடன்கள் முறைப்படுத்தப்படவேண்டும். பசி காலத்தில் நடந்தது போல், கொல்லேட்ரால் செக்யூரிட்டி இன்றி, வெறும் மேலிடத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கே கடன் வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அரசியல்வியாதிகள், மற்றும் அதிகாரிகளின் வருமானத்திற்கு மேல் கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள், அவை வாங்கப்பட்ட source விவரங்கள் சேகரிக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R Elangovan - Thiruvarur,இந்தியா
08-ஜன-202021:26:09 IST Report Abuse
R Elangovan ரயிலில் முன்பதிவு முறை பாமர மக்களை மிகவும் பாதிக்கிறது முன்பதிவு செயாதவர்கள் படும் பாடு ரொம்பவும் கவலை அளிக்கிற விஷயமாகவும், இடம் பிடிக்க சண்டை போட்டுகொண்டு பல இன்னல்களை மக்கள் அனுபவித்து பயணத்தை வெறுக்கும் சூழல் உருவாக்குகிறது ஏழை மக்கள் அதிகம் உள்ள நாட்டில் அவர்களுக்கென்று குறைவான பெட்டிகள் ஒவ்வொரு ரயிலிலும் ஒதுக்கப்படுகிறது அந்த குறைகளை இந்த பட்ஜெட்டில் எளிமைப்படுத்தி பாமரமக்களும் பிரச்னை இன்றி பயணிக்க ஆவண செய்ய வேண்டும். இதில் பாமர மக்களும் தவறு செய்கிறார்கள் 6 நபர்கள் அமர்ந்து பயணிக்க வேண்டிய இடத்தை இருவர் அதில் படுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு இடமும் தர மறுக்கிறார்கள் இதனால் தேவையற்ற சமடை, மன உளைச்சல் ஏற்பட்டுகிறது இதில் பெரும்பாலும் பெண்கள் அதிக இன்னலுக்கு ஆளாகிறார்கள் இவைகளை ரயில்வே நிர்வாகம் கருத்தில் கொண்டு காவல் அலுவலர்கள் கண்காணித்து அவைகளை சரிசெய்து கொடுக்கும் கடமையும் உள்ளது ஆனால் ஒரு காவலரும் அந்த பெட்டியை கண்காணிப்பதில்லை என்பது வறுத்த பட வேண்டிய ஒன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X