உயிரோடு இருக்கும் 'இறந்த' சிறுமிகள்: சிபிஐ பகீர்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement
Girls, Dead, Alive, Sensational, Twist, BiharShelterCase, cbi, supremecourt, centralbureauofindia, sc,  shelter, Bihar, சிறுமிகள், காப்பகவழக்கு, பீஹார், பீகார், சிபிஐ, சி.பி.ஐ.,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி ; பீஹார் முசாபர்நகரில் காப்பகத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 35 சிறுமிகள் உயிருடன் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் , முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர், அரசு நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார். காப்பகத்தில் உள்ள சிறுமியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். காப்பகத்திலிருந்த 35 சிறுமியர் பலாத்காரத்துக்கு ஆளானது மருத்துவ சோதனையில் தெரிந்தது. பிரஜேஷ் தாக்கூர் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டு, முசாபர்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.





இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.




இந்நிலையில், தலைமை நீதிபதி பாப்தே அமர்வு முன்பு, வழக்கு குறித்த தற்போதைய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் கூறுகையில், இந்த வழக்கில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 35 சிறுமிகள், பின்னர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். பீஹாரில் உள்ள 17 காப்பகங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

அதில், 13 காப்பகங்கள் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4க்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. காப்பகங்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள், அவர்களது கடமையை செய்யவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோயப் ஆலம் கூறுகையில், காப்பகத்தில் கொலை நடந்துள்ளதாக, அங்கு தங்கியிருந்தவர்கள் கூறிய குற்றச்சாட்டு குறித்து சிபிஐ பதிலளிக்கவில்லை என்றார். இதன் பின்னர், சிபிஐ அறிக்கை தொடர்பாக பதிலளிக்கும்படி மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X