கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திமுக கவுன்சிலரை ஆஜர்படுத்த உத்தரவு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement


மதுரை : ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வதுவார்டு திமுக கவுன்சிலர் சாத்தையா கடந்த 3ம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் ராஜா போலீசில் புகார் அளித்தார்.

அவர் தனது மனுவில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சாத்தையா வெற்றி பெற்றார். பதவியேற்ற பின்னர் அவரை காணவில்லை. அதிமுகவினர், தனது தந்தையை கடத்தி விட்டனர் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், கவுன்சிலர் சாத்தையாவை நாளை (ஜன.,9) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். தவறினால் ராமநாதபுரம் எஸ்.பி., நேரில் ஆராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X