10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்கிறது ஆஸி., அரசு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (54)
Advertisement
Australia, Kill, Camels, Wildfires, aus, water, food, ஆஸ்திரேலியா, ஆஸி, ஒட்டகம், கொலை, அரசு

இந்த செய்தியை கேட்க

சிட்னி: ஆஸி.,யில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அதிக தண்ணீர் குடிப்பதாகக் கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 5 நாள் திட்டத்தை துவக்கியுள்ள ஆஸ்திரேலிய அரசு, ஒட்டகங்களை கொல்வதற்கு ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது. அதிகளவு உணவு, குடிநீர் அருந்துவதாலும், உள்கட்டமைப்பை சேதப்படுத்துவதுடன், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாலும் ஒட்டகங்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மரிதா பகர் என்பவர் கூறுகையில், ஒட்டகங்கள் தங்களுக்கு பெரிய தொந்தவு கொடுக்கிறது. எங்கள் வீட்டு மேற்கூரைகளை தட்டுகிறது. வீடுகளில் 'ஏசி'க்களில் உள்ள தண்ணீரை குடிக்கிறது. இதனால், வெப்பம் அதிகரிப்பதுடன், அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் முதல் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்க பெரும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால், சிலர் உயிரிழந்தனர். லட்சகணக்கான உயிரினங்கள் இறந்துள்ளன. அல்லது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
wellington - chennai,இந்தியா
11-ஜன-202016:42:40 IST Report Abuse
wellington i am indian citison, my name is wellington prabu, Australia is a wonderful country, why killed the camal? my idea said, camel is a wonderful animal, alwaye occuring the water content level decrease in condition, i am accept the statement, but idoit government, water stablity levels increasing conditions, best way water skipping method . i slove problem. world is going very bad, attitude is very less in condition. very bad news
Rate this:
Share this comment
Cancel
பெருமாள்மலைகுரங்கு - கள்ளந்திரி,இந்தியா
11-ஜன-202016:13:05 IST Report Abuse
பெருமாள்மலைகுரங்கு இதைத்தான் வள்ளுவரும் அன்று சொன்னார் . தன்னுயிர் நீப்பினும் செய்யற்க . தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை என்று. வள்ளுவர் இந்து மத சைவ வைணவ பேதங்கள் அடிப்படையில் வாழ்ந்தவர் . அவர் சொன்னதை பின்பற்ற வழியற்ற பிற மதத்தினர் அவரை மட்டும் தனதாக்க நினைக்கிறார்கள் .கருணை அன்பு அறம் னைத்தையும் வழியுறுத்திய இந்து மதம் , உயிர்க்கொலை செய்தல் பாவம் என்று வலியுறுத்துகிறது . வள்ளுவமும் அதையே வலியுறுத்தி மேலும் கூறுகிறது " குறள்:251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். குறள் விளக்கம்: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு அருளை உடையவனாக இருக்க முடியும்?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஜன-202010:42:56 IST Report Abuse
Sampath Kumar ஐயோ பாவம் அவைகளை மற்ற நாட்க்கு குடி அமர்த்தலாம் குறிப்பாக சவூதி, ஓமான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X