பொது செய்தி

இந்தியா

இந்தியா தலையிட வேண்டும்: ஈரான் விருப்பம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (55)
Advertisement
Iran, Ambassador, AliChegeni, India, Peace, Initiative, ஈரான், தூதர், அலிசெகேனி, இந்தியா, அமைதி, புகழாரம்

புதுடில்லி: உலகில் அமைதியை நிலைநிறுத்துவதில் இந்தியா சிறந்த பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவுடன் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில் தலையிட்டு தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என ஈரானிய தூதர் அலி செகேனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஹெலிகாப்டர்கள், தளவாடங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.




இந்நிலையில், டில்லியில் உள்ள ஈரானிய தூதரகத்தில் சுலைமானிக்கான இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஈரானிய தூதர் அலி செகேனி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகில் அமைதியை நிலைநிறுத்துவதில் இந்தியா சிறந்த பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. எங்கள் பிரச்னையிலும் இந்தியா தலையிட வேண்டும்.
எங்கள் நல்ல நண்பரான இந்தியாவை போன்று, பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்காத அனைத்து நாடுகளின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். உலகில் உள்ள அனைவரும் அமைதி மற்றும் செழிப்பை தேடுகிறோம். எங்களுக்கு போர் தேவையில்லை. அதற்கான எந்தவொரு முயற்சியையும், திட்டத்தையும் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
09-ஜன-202010:45:46 IST Report Abuse
oce முஸ்லீம்கள் சந்தர்ப்ப காரியவாதிகள்.காரியம் முடிந்தவுடன் காலை வாரி விடுபவர்கள். ட்ரம்ப் மோடிஜி உறவு முறை நன்றாக இருப்பதை பயன்படுத்தி ஈரானுக்கு உதவ வேண்டு மென்று அல்செகேனி இந்திய பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா உதவ வேண்டுமென்பது பாரத பிரமரை மறைமுகமாக கேட்பதாகும்.. அமெரிக்காவுக்கு பிடிக்காத ஒரு எதிரியை அதாவது ஈரானிய தளபதி சுலைமானியை போட்டு தள்ளியதற்கு பயந்தது போல் காட்டி இப்படி எங்களுக்கு பிடிக்காத நாடு அமெரிக்கா ஆனால் உங்களுக்கு பிடித்த நாடு அமெரிக்கா. அதனால் நீங்களாவது சொல்லி எங்களை காப்பாற்றுங்கள் என்று கூவுகிறார். பாகிஸ்தான் தீவிர வாதிகளால் இனி இந்தியாவுக்கு எந்த தொல்லையும் தராமல் ஈரான் பார்த்துக்கொள்ளும் என்ற எழுத்திலான நிபந்தனையுடன் கேட்பாரா. ஒரு சுலைமானிக்கு எண்பது அமெரிக்கர்களை கூண்டோடு கொன்று பழி வாங்கியது தவறில்லையா. அதற்கு இந்தியாவிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பாரா. இதெல்லாம் செய்தால் மோடிஜி ட்ரம்ப் இசைந்தால் ஈரானுக்கு உதவ முன் வரக்கூடும்.
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
09-ஜன-202005:24:07 IST Report Abuse
ராஜேஷ் நிச்சயமாக பாஜகவால் முடியும் . நீங்கள் இந்தியாவில் மோடி அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையிலும் தலை இடாமல் இருந்தால் . சீனா தாக்குதல் நடத்த தயாராக இருந்தபோது . தனது திறமையால் சீனாவை நிலைகுலைய வைத்தது . அயோத்தி தீர்ப்பாக இருக்கட்டும் . இனி ஸ்ரீ ராமருக்கு ஆலயம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஜன-202000:14:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெளியே: மொலாளி வெளியே போயிருக்காரு. அப்புறமா வாங்க. உள்ளே: அலோ, டிரம்ப் ஹை கியா? வாட் கர்னா ஹை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X