சம்பவம் செய்தி

தமிழ்நாடு

13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலை மீட்பு

Added : ஜன 08, 2020
Advertisement
statue, police, smuggling, அம்மன் சிலை, சிலைகடத்தல்தடுப்பு, போலீசார், 13ம்நூற்றாண்டு, மீட்பு

சேலம்: சேலம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டிலிருந்து 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

கெங்கவல்லியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜசேகரன். இவர் பஞ்சலோக சிலை ஒன்றை வெளிநாட்டில் விற்க முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து அம்மன் சிலையை போலீசார் மீட்டனர். அந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு நீதிபதி முன் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை நாகேஸ்வரன்கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X