கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டெர்லைட்' ஆலை மீண்டும் திறப்பு? தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (29)
Advertisement
Sterlite,Tuticorin,judgement,HighCourt,ஸ்டெர்லைட்,தூத்துக்குடி,ஐகோர்ட்,தீர்ப்பு,

இந்த செய்தியை கேட்க

சென்னை: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலையை திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

துாத்துக்குடியில் இயங்கி வந்த, ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆலைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. அரசின் உத்தரவை எதிர்த்து, ஆலையை திறக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும், வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.





வழக்கு விசாரணையின் 39வது நாளான இன்று(ஜன.,8), அரசு தரப்பு மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அரசு தரப்பில், தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிகளை பின்பற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மறுத்ததால், ஆலை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டால், விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும், கூடுதல் கட்டுபாடுகள் விதித்தாலும் அதை பின்பற்றத் தயார் எனவும் வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் இன்று முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு ஒத்திவைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
09-ஜன-202010:34:14 IST Report Abuse
நக்கீரன் 13 பேரை சுட்டு கொன்று விட்டு மீண்டும் 'ஸ்டெர்லைட்' ஆலை திறந்தால் ..../
Rate this:
Share this comment
natarajan s - chennai,இந்தியா
09-ஜன-202011:46:11 IST Report Abuse
natarajan sஇறந்த 13 பேருக்காக தூத்துக்குடியில் உள்ள எல்லோரும் இதுவரை சாப்பிடாமல் இருக்கிறார்களா ? அல்லது வேலை தொழில் வியாபாரம் அனைத்தையும் மூடிவிட்டு எங்கு போய் யாசகம் கேட்பது. படித்தவர்களுக்கும், இன்ன பலருக்கும் வேலை வாய்ப்பை மறுப்பதுதான் சமூக நீதியா ? அப்படியே தவறுகள் இருந்தால் தவறுகளை சரி செய்து மீண்டும் இயக்கப்பட வேண்டும், இண்டஸ்ட்ரியல் வளர்ச்சி இல்லாமல் இனி எதிர்காலம் கிடையாது, வெறுமனே சர்ச்சில் மணி அடித்தால் எவ்வளவு நாட்களுக்கு அவர்களால் சோறு போட முடியும். உங்கள் வீட்டில் உள்ள இளைஞருக்கு வேலை யார் கொடுப்பது ? பாதிரிமார்களுக்கு வத்திக்கான் படியளக்கும், திருமதி கனிமொழிக்கு சோற்றுக்கு கவலை இல்லை அதுபோல்தான் திரு வைகோவிற்கு, உங்கள் எதிர்கால சந்ததியினரை பற்றி சிந்தியுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
09-ஜன-202010:33:27 IST Report Abuse
நக்கீரன் 13 பேரை சுட்டு கொன்று விட்டு மீண்டும் 'ஸ்டெர்லைட்' ஆலை திறந்தால் ...
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
09-ஜன-202009:23:38 IST Report Abuse
ஆனந்த் உண்மை தெரியாமல் போராடுவதாக சொல்லி வன்முறையை கையில் எடுத்து 13 பேரை கொன்றதுதான் மிச்சம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X