அசாமில் இளைஞர் விளையாட்டு திருவிழா; மோடி பங்கேற்கவில்லை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (24)
Advertisement

புதுடில்லி : அசாமில் கேலா இந்தியா என்னும் இளைஞர் விளையாட்டு திருவிழாவை தொடங்க பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மோடி பங்கேற்கவில்லை. நேரமின்மையின்மை காரணமாக அவர் பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது.






குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் 'கேலா இந்தியா' என்னும் இளைஞர்களின் திருவிழா ஜன., 10 ல் நடக்க உள்ளது. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போராட்டங்களின் எதிரொளியால், பாதுகாப்பு கருதியும் , தகு்நத நேரம் இன்மையாலும் பிரதமரின் பயணம் ரத்து செய்திருப்பதாக அசாம் பாஜக செய்தித் தொடர்பாளர் திவான் துருபா ஜோதி மரால் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கும், அசாம் மாநில அரசிற்கும் பிரதமர் தரப்பில் இருந்து தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் பங்கேற்க வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், " பிரதமர் மோடி, கெலோ இந்தியா விளையாட்டு என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, இது ஒரு இயக்கம் என்று கூறினார். இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதிகளை ஊக்குவித்தல் மற்றும் விளையாட்டு வீரர்களை ஒரு விளையாட்டு கனவைப் பின்தொடர ஊக்குவிக்க பெற்றோர்களை உணர்த்துவது இந்தியாவை உருவாக்குவதற்கான முதல் படியாகும் ஒரு விளையாட்டு வல்லரசு. கெலோ இந்தியா விளையாட்டுக்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக அறிவிக்கப்படுவது அந்த இலக்கை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இவ்வாறு கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
09-ஜன-202013:04:16 IST Report Abuse
Narayanan Muthu என்ன பண்ணாலும் கேக்க நாதியில்லையின்னு போட்ட ஆட்டத்துக்கெல்லாம் பங்கம் வந்துடிச்சி போலெ . வீரன் சூரன்னு விட்டதெல்லாம் வெறும் பீலாதனா. அவங்களுக்கு பதிலா இங்க உள்ள ராஜாவ அனுப்பியிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-202012:58:09 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அசாம் மாநில பிரச்சினை வேறு , அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசத்துரோகிகள் இங்கே கொக்கரித்து எந்த பயனும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
09-ஜன-202012:33:49 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அஸ்ஸம்ல பலிக்கல போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X