பொது செய்தி

இந்தியா

பெல் உள்ளிட்ட 5 நிறுவன பங்குகளை விற்க ஒப்புதல்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (25)
Advertisement
Cabinet,BHEL,Javadekar,பெல்,தனியார்,விற்க,ஒப்புதல்,அமைச்சரவை,பிரதமர்,மோடி,PM,Modi

புதுடில்லி: பெல் நிறுவனம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பெல், நீலச்சல் இஸ்பட் நிகாம் லிமிடெட், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், மெகான் மற்றும் நேஷனர் மினரல் டெவலப்மென்ட் பங்குகளை விற்க, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ஜவடேகர், அமைச்சரவை கூட்டத்திற்குபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.





நேற்று அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், ஏர் இந்தியாவின் பங்குகள் முழுவதையும் தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது குறப்பிடத்தக்கது.


அதிர்ச்சி


பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய ஸ்டிரைக் நடந்த நிலையில், மத்திய அமைச்சரவை பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல் அளித்தது, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
09-ஜன-202013:17:38 IST Report Abuse
OUTSPOKEN பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு கொடுப்பது அரசாங்கத்தின் இயலாமை. இது அழிவின் ஆரம்பம். எல்லாம் தனியார் மயம் ஆகிவிட்டால் பாதிப்பு சாதாரண மக்களுக்குத்தான். இனி தனியார் நிர்ணயிக்கும் விலையை மக்கள் கொடுக்க வேண்டியதிருக்கும் அவர்களுக்கு லாபம்தான் முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
09-ஜன-202013:16:21 IST Report Abuse
pradeesh parthasarathy லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களை எதற்க்காக விற்க வேண்டும் ... காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல சிரமங்களுக்கு இடையில் மிகவும் கடின பங்களிப்போடு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்களை விற்று இன்று பொருளாதார ஓட்டையை சரி செய்ய முயல்கிறார்கள் .... அப்பன் உண்டாக்கிய சொத்துகளை மகன் விற்று காசை தண்ணீராக செலவு செய்வது போன்று .... முடிந்தால் பிஜேபி அரசு இம்மாதிரி புதிதாக எந்தவொரு ஸ்தாபனத்தையாவது உருவாக்கி காட்டட்டும் .. மாறாக விற்பது என்பது நாட்டின் சீரழிவின் ... முதலில் தகுதி வாய்ந்த ஒருவரை நிதி அமைச்சராகக்குங்கள் .... இல்லை பிறர் ஆலோசனையை ஏற்று கொள்ளுங்கள் ... கீழ் மட்ட மக்களிடம் பண புழக்கம் இல்லை என்றால் பொருளாதார தொய்வு ஏற்படும் .. அதனால் தான் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ஆறாயிரம் கொடுக்கப்படும் ... இந்த பணம் அவர்கள் செலவு செய்யும்போது உற்பத்தி துறை தானாக வளர்ச்சி அடையும் என்று கூறியது .... பிஜேபி மேதாவிகள் நக்கல் அடித்தார்கள் ... அதன் விளைவு இன்று நன்கு தெரிகிறது ... கார்பொரேட் நிறுவனங்களுக்கு வரி தள்ளுபடி செய்தால் மட்டும் நாடு முன்னேறுமா... இந்த நிறுவனங்களுக்கு வரியை தள்ளுபடி செய்ததினால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை குறைந்த விலைக்கு இவர்கள் விற்றார்களா ..அதுவும் இல்லை ... பின்னர் எதற்க்காக இந்த வரி விளக்குகள் ... கீழ் மட்ட மக்களிடம் பண புழக்கத்தை உருவாக்க வழி செய்யுங்கள் .... பிஜேபி நிர்வாகம் படு தோல்வி ...
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
09-ஜன-202013:07:58 IST Report Abuse
Nalam Virumbi ram ram அவர்களே உங்களை போன்ற "திறமைசாலிகள்" defence ல் அதிகம் இருக்கும்போது அது தனியார் மயம் ஆக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X