சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்கள் 'டிரஸ்சிங் ரூமில்' ரகசிய கேமரா; மூவர் கைது

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (35)
Advertisement
dressing_room,petrol_bunk,Coimbatore,arrest,கோவை,உடைமாற்றும்அறை,ரகசியகேமரா,கைது

கோவை: பெண்கள் 'டிரஸ்சிங் ரூமில்' ரகசிய கேமரா எடுத்த விவகாரம் தொடர்பாக, டி.வி., நிருபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் செயல்படும் பெட்ரோல் பங்க்கில், பெண்கள் 'டிரஸ்சிங் ரூமில்' ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்தது அம்பலமானது. இது தொடர்பாக, வீடியோ எடுத்த சுபாஷ், வீடியோவை 'வாட்ஸ் அப்பில்' பரப்பிய மணிகண்டன், வீடியோவை ஊடகத்தில் வெளியிட்ட தனியார் டி.வி., நிருபர் மருதாசலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.





இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் ரூட்ஸ் கம்பெனியின் பெட்ரோல் பங்க்கில் மணிகண்டன் என்பவர், தனது மனைவியுடன் பணியாற்றி வந்துள்ளார். அதே பங்க்கில் பணியாற்றிய சுபாஷ் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, பெண்கள் உடைமாற்றும் அறையில், தனது மொபைல் போன் கேமராவை மறைத்து வைத்து, பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாக படம் எடுத்துள்ளார். இதை கவனித்த மணிகண்டனின் மனைவி, சுபாஷிடமிருந்து மொபைல் போனை பறித்து, அதிலிருந்த வீடியோவை அழித்து விட்டு மொபைல் போனை உடைத்து எறிந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக, பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிய பெண்கள் யாரும், அப்போது புகார் கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பெட்ரோல் பங்க்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஊடகங்களில் பரவியதை பார்த்து அதிர்ச்சியடைந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரித்தனர், விசாரணையில், சுபாஷ் என்பவர் எடுத்த வீடியோவை, மணிகண்டன் திருட்டுத்தனமாக அவரது மொபைல் போனிலிருந்து ஷேர் செய்துள்ளார். அதை தனியார் டி.வி., நிருபர் மருதாசலத்துக்கு அனுப்பியுள்ளார். மருதாசலம் ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். எனவே, மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, ஜே.எம்:7, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.


5 ஆண்டு வரை சிறை:


மூவர் மீதும், மானபங்கம், சட்டவிரோதமாக பெண்களை ஆபாசமாக வீடியோ அல்லது போட்டோ எடுத்து பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணை தவறான கோணத்தில் ஒளிபரப்புதல் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்தாண்டு வரை சிறையும், அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
13-ஜன-202011:00:18 IST Report Abuse
karutthu அந்த தனியார் டி வீ காரன் யார் ,எந்த டி வீ யை சார்ந்தவன் என்று தெரியப்படுத்தவும் .
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
10-ஜன-202000:41:42 IST Report Abuse
dandy டாஸ்மாக் நாட்டில் மீசை முளைக்க முதல் அக்கா மகளை கல்யாணம் செய்யலாம் ...ஆனால் இன்னும் புதிதாக பகுத்தறிவு இந்த எருமைகளுக்கு தேவை படுகின்றது ...வாழ்க கண்ணியம் ..கட்டுப்பாட்டு
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-ஜன-202022:31:06 IST Report Abuse
Krishnamurthy Venkatesan முதலில் நடுரோட்டில் வைத்து செருப்பால், துடைப்பத்தால் நன்கு துவைக்கவும். இந்த தண்டனையை பாதிக்கப்பட்டவர்களோ அல்லது பொதுமக்களோ தரலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X