பொது செய்தி

இந்தியா

100 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்; நிறுவனங்களுக்கு அழைப்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (25)
Advertisement
Railway,IndianRailway,NITI_Aayog, Private,Train, தனியார்_ரயில்,நிதிஆயோக்,அழைப்பு

புதுடில்லி: நாடு முழுவதும் 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு 'நிடி ஆயோக்' அழைப்பு விடுத்துள்ளது.

தனியார் ரயில்கள் இயக்கப்படுவது குறித்த கலந்துரையாடலுக்கான வரைவு ஆவணத்தை, 'நிடி ஆயோக்' வெளியிட்டுள்ளது. ஜன.,17ம் தேதிக்குள் இதுதொடர்பான எழுத்துப்பூர்வமான கருத்தையும் கேட்டுள்ளது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில், நாடு முழுவதும் 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணம், வழித்தடம் குறித்து தனியார் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





தனியார் நிறுவனங்களை தேர்வு செய்ய ஏலம் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.450 கோடி சொத்து வைத்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சில வழித் தடங்களில் 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில், மும்பை - ஆமதாபாத், டில்லி- லக்னோ இடையே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
13-ஜன-202019:49:10 IST Report Abuse
Siva வரவேற்கத்தக்கது .இந்திய அரசு ஊழியர்கள் என்றும் மாற போவதில்லை .தனியாரின் ரயில்வே சேவை நிச்சயம் நன்றாக இருக்கும் .இங்கே தனியறை எதிர்க்கும் எதனை பேர் ஏர் இந்தியா விமான சேவையை பயன்படுத்துகின்றனர் ? அரசு ஊழியர்கள் இந்தியாவில் மிக பெரிய வாக்கு வங்கியாக உள்ளதால் எந்த அரசாங்கமும் அவர்களின் முறையற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிந்துவிடுகின்றனர் .இவர்கள் கேள்வி கேட்க ஆளில்லை.இவர்களுக்கு போராட்டம் செய்யவும் கொடிபிடிக்கவும் மட்டுமே நேரம் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-202014:34:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சிறந்த சேவை கிடைக்க இது ஒரு முயற்சிதான். தனியார் கம்பெனிகள் சேவைக்கான தளத்தை அமைத்துக்கொடுக்கும். தற்போது ரயில்களில் எந்த ஒரு ஊழியரும் இருக்க மாட்டார், AC ஓடவில்லை , தண்ணீர் வரவில்லை என்று புகார் சொல்ல கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள். அந்த நிலை மாறும்
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
09-ஜன-202014:33:52 IST Report Abuse
A.Gomathinayagam ஆம்னி பேருந்துகள் அடிக்கும் கட்டண கொள்ளை இனி தனியார் ரயில்களிலும் தொடரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X