சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை -

Added : ஜன 08, 2020
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை -

'மாறுபட்ட கட்சி என பெயர் பெற்ற, பா.ஜ., இப்போது, வழக்கமான, திராவிட கட்சிகள் போல, சினிமா நடிகர்களுக்கும், நடிகையருக்கும் முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டதோ...' என, கவலை தோன்றும் வகையில், பா.ஜ., மாநில செயலர் ராகவன் பேட்டி: பிரதமர் மோடியின் சீரிய தலைமையை விரும்பும் சினிமா பிரபலங்கள், பா.ஜ.,வில் சேர்ந்த வண்ணமாக உள்ளனர். எங்கள் கட்சியில் பல பிரிவினரின் அணிகள் இருப்பது போல, சினிமா நட்சத்திரங்கள் அணியையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

'அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் ஒரே மருந்து, விஷம் என்று தான் கேள்விப்பட்டுள்ளோம். அதை தான் நீங்கள் சொல்ல வருகிறீர்களா...' என, கிடுக்கி போட வைக்கும் விதமாக, இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: மக்களின் எந்தவொரு பிரச்னையையும் முதலாளித்துவத்தால் தீர்க்க முடியவில்லை. மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமானால், சோசியலிசத்தால் தான் முடியும். அது தான், அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும்.

'வயது, 80ஐ நெருங்கும் நிலையிலும், தி.மு.க., ஆதரவு ஆசிரியர் சங்கத்தின் தலைவராக நீங்கள் இருப்பது போல, கவர்னர் உரையிலும் சில சமாளிப்புகள் இருக்கத் தான் செய்யும்...' என, அதிரடியாக சொல்ல வைக்கும் வகையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் மீனாட்சிசுந்தரம் அறிக்கை: தமிழக மாணவர்கள், உயர்கல்விக்கு செல்லும் வசதி எளிதாக்கப்பட்டுள்ளது; பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது, அப்பட்டமான பொய்.

'எதிர்க்கட்சிகள் போராட்டம், அதற்கு எதிராக போராட்டம் என, தொடர்ந்து நடத்தி, தமிழகத்தின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட்டனர், உங்களைப் போன்ற அரசியல் கட்சியினர்...' என, கவலை தெரிவிக்க வைக்கும் வகையில், பா.ஜ., தேசிய துணைத் தலைவர் ஜெய் பாண்டா பேச்சு: குடியுரிமை திருத்த சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றன. அதை பொய் என, அம்பலப்படுத்துவதற்காகத் தான், நாங்கள் பேரணி நடத்துகிறோம். அந்த சட்டம், இந்தியர் எவரின் குடியுரிமையையும் பறிக்காது.

'நீங்கள் சொல்லும் பல்கலையில், ஐந்து மாதங்களாக, ஒரு நாள் கூட வகுப்பு நடக்க, 'காம்ரேட்'டுகள் விடவில்லை; படிக்க வந்த மாணவர்கள், அதை தட்டிக் கேட்டனர் என்பதை பக்குவமாக மறைத்து, கலாசாரம், கட்டவிழ்ப்பு என எதை எதையோ பேசுகிறீர்களே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி: ஒரு நாட்டின் கலாசாரத்தை அழிக்க வேண்டும் என்றால், கல்வி நிலையங்களை அழிக்க வேண்டும் என்ற சாணக்கியர் கொள்கையை பின்பற்றும் மத்திய அரசு, டில்லி பல்கலைக் கழகத்தில், பயங்கர தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அப்பாவி மாணவர்கள் பலர், குண்டர்களால் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X