பொது செய்தி

தமிழ்நாடு

'நீட் தேர்வுக்கு விதை போட்டது தி.மு.க., - காங்., கூட்டணி'

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (13+ 7)
Advertisement
NEET,exam,DMK,Congress,திமுக,காங்கிரஸ்,நீட்

சென்னை : ''நீட் தேர்வுக்கு, விதை போட்டது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு, ஜன., 6 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. அதற்கு, இரண்டு நாட்கள் முன்னதாக, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி, இரண்டு சட்ட மசோதாக்களை ஒருமனதாக நிறைவேற்றி, மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பினோம். அது திரும்பி வந்ததா; நிராகரிக்கப்பட்டதா; எந்த தகவலும் இல்லை.கடந்த சட்டசபை கூட்டத்தில், இதுகுறித்து கேட்டபோது, அமைச்சர்கள் ஆவேசமாக பதில் அளித்தனர். 'மத்திய அரசிடமிருந்து, பதில் வந்ததும் தெரிவிக்கப்படும்' என்றனர். 'மத்திய அரசு நிராகரித்தால், சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தி, முடிவு செய்யப்படும்' என, முதல்வர் தெரிவித்தார்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்ட மசோதா நிராகரிக்கப் பட்டிருந்தால், மீண்டும் சட்டசபை கூடி, மசோதாவை நிறைவேற்றி அனுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். அதை செய்யாமல், மீண்டும் வழக்கு போட்டுள்ளதால், என்ன நடக்கப் போகிறது; இது, சமூக நீதிக்கும், கிராம மக்களுக்கும் செய்துள்ள மாபெரும் துரோகம்.

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்: 'நீட்' எதிர்ப்பு கொள்கையில், அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, 6ம் தேதி கடைசி நாள். நாம், 4ம் தேதி வழக்கு தொடர்ந்தோம். இரண்டுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.நீட் தேர்வுக்கு, 2010 அக்., 27 அன்று விதை போட்டது, மத்தியில் ஆட்சியிலிருந்த, தி.மு.க., - காங்., கூட்டணி அரசு. அன்று, நீங்கள் துரோகத்தை விதைக்காமல் இருந்தால், இன்று பிரச்னை இருந்திருக்காது.

ஸ்டாலின்: அதை எதிர்த்து, தி.மு.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இன்று, நீங்கள் செய்திருப்பது தான் துரோகம்.அமைச்சர் விஜயபாஸ்கர்: அந்த வழக்கில், நீங்கள் சீராய்வு மனு போட்டீர்கள். மனு போடாதீர்கள் என, ஜெயலலிதா கூறினார். நீங்கள் கேட்காததால், உச்ச நீதிமன்றம், அந்த உத்தரவை திரும்ப பெற்றது. எனினும், மூல வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.இவ்வழக்கு, டிச., 12ல் விசாரணைக்கு வந்தபோது, நீட் சட்டத்தை எதிர்த்து, மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதை, நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அதன் அடிப்படையில், புதிய வழக்கு தொடர்ந்துள்ளோம். இதில், யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
வழக்கு தொடர்ந்தது சரியா, தவறா?எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: ஜெயலலிதா இருந்த வரை, தமிழகத்திற்கு, நீட் தேர்வு வரவில்லை. அவர் மறைவுக்கு பின், நீட் தேர்வு வந்ததற்கு என்ன காரணம்; நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின், வழக்கு தொடர்ந்து, என்ன சாதிக்க போகிறீர்கள்?

அமைச்சர் விஜயபாஸ்கர்: தி.மு.க., தும்பை விட்டு, வாலை பிடிக்கிறது.

ஸ்டாலின்: நீதிமன்றம் சென்றதை தவறு என்று கூறவில்லை. நீங்கள் தான் தும்பை விட்டு, வாலை பிடித்துள்ளீர்கள்.

துரைமுருகன்: குடியுரிமை திருத்த சட்டத்திலும், தும்பை விட்டு வாலை பிடிக்கிறீர்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:ஜெயலலிதா இருந்த போது, நீட் சட்டமாகவில்லை. தற்போது, சட்டமாகி விட்டதால், சட்டப் போராட்டம் நடத்தி தான் விலக்கு பெற முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நீட்வேண்டாம் என்பதில், அ.தி. மு.க., உறுதியாக உள்ளது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (13+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
09-ஜன-202023:11:44 IST Report Abuse
Raj ஆள் மாறாட்ட வழக்கு என்ன ஆச்சு? இந்த கூட்டு களவாணி
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஜன-202016:16:22 IST Report Abuse
Endrum Indian அறிவு 1% கூட இருந்தால் போதும் நீட், குடியுரிமை சட்டம் எல்லாமே நன்றாக தெரியும் அது கூட இல்லையென்றால் இப்போது சுடலை மாயாண்டி முதல் ராவுல் வின்சி பப்பு தி கிரேட் வரை தறிகெட்டு உளறலாக வந்து கொண்டே இருக்கின்றதே அப்படித்தான் ஆகும் உங்கள் வாழ்க்கை எல்லா விதத்திலும். ஒரு கடைக்கு சென்றால் கூட நாம் கேட்பது என்ன நல்ல அரிசி கல் இல்லாமல் அதைத்தான் நீட் செய்கின்றது. அதே தான் குடியுரிமை சட்டமும்" ஆதார் கார்டு, ரேஷன் கார்டு , தேர்தல் கமிஷன் கார்டு காட்டு" நல்லது உனது பர்த் சர்டிபிகேட் காண்பி???இல்லை???சரி எங்கு படித்தாயோ அதை காண்பி???இல்லை அப்போ நிஜமாகவே இந்த நாட்டின் குடிமகனா???அதன் காண்பித்து விட்டேனே???அப்படியென்றால் உன் தந்தை???அதெல்லாம் காண்பிக்க முடியாது???அப்போ நீ இந்த நாட்டின் குடிமகன் அல்லவே அல்ல பங்களாதேஷ், பாகிஸ்தானிலிருந்து வந்த என்ற ஒரே காரணத்துக்காக உனக்கு இந்த அரசியல்வாதிகளால் சிபாரிசு செய்து கொடுக்கப்பட்டது தான் இந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு , தேர்தல் கமிஷன் கார்டு ஆகவே இதை நம்புவதற்கில்லை என்று சொல்கின்றது குடியுரிமை சட்டம்.
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
09-ஜன-202012:07:34 IST Report Abuse
TAMILAN இந்த ஸ்டாலின் இதற்க்கெல்லாம் கையெழுத்து போட்டுள்ளாரா? நீட், ஜல்லிக்கட்டு தடை, மீத்தேன் திட்டம், தீங்கு விளைவிக்கும் துரித உணவு கே.ப.சி. இவரது அப்பராவது தனது இனமான தெலுங்கருக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்து தமிழரை தாழ்த்தி பிறகு வாய்ப்பு வரும் வரை காத்திருந்து இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்தார். பிரபாகரன் தமிழகத்திற்க்கு கொண்டு வரப்பட்டால் நாம் தமிழரின் துரோகி என்பது வெளியில் தெரிந்து விடும் என்பதற்க்காக அங்கேயே வைத்து பிரபாகரனை கொல்ல திட்டம் தீட்டி சோனியா மற்றும் சீனா, பாக்கிஸ்தான் போன்ற வெளிநாட்டு உதவியுடன் வெற்றியும் பெற்றவர் கருணாநிதி. மகன் அப்பனை மிஞ்சும் வகையில் தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு மறைமுகமா தமிழக மக்களை சீரழிக்க கமிஷன் பெற்றுள்ளார். ஜல்லிக்கட்டு தடை மூலம் ஜெர்சி மாட்டு இறக்குமதி மற்றும் சினை ஊசி விற்பனை(ஒவ்வொரு மாட்டு இறக்குமதிக்கு மற்றும் ஊசிக்கு கமிஷன்), அதன் மூலம் சர்க்கரை வியாதிக்கான மருந்துகள் இறக்குமதி (ஒவ்வொரு மருந்து இறக்குமதிக்கு கமிஷன்), மீத்தேன் திட்டத்திற்கான கமிஷன், கே.எப்.சி இடம் கமிஷன் மேலும் அதன் மூலம் வரும் நோய்களுக்கான மருந்துகள் இறக்குமதிக்கான கமிஷன். பாவத்தின் பணம் . என்ன ஆகப்போகுதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X