தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி.,அந்தஸ்து:பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (178)
Advertisement
தலித் கிறிஸ்தவர்கள், எஸ்.சி., அந்தஸ்து 2 வாரம் அரசுக்கு உத்தரவு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலித் மக்களுக்கு எஸ்.சி. எனப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





இது குறித்து தலித் கிறிஸ்தவர்களுக்கான தேசிய கவுன்சில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தினருக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான சலுகைகள் வழங்கப்படுவதில்லை.மதம் மாறுவதால் மட்டுமே ஒருவரது சமூக பொருளாதார நிலை மாறிவிடாது. எனவே கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான அந்தஸ்து வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த மனு மீது 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய சமூக நீதித்துறை, தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன், சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் ஆகியவைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்க உத்தரவிட்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (178)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09-ஜன-202022:43:21 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஹிந்து மாதத்தில்தான் ஜாதி பாகுபாடு உள்ளது அதனால்தான் வேறு மதங்களுக்குப் போகிறோம். அங்கெ ஜாதிப்பாகுபாடென்பதே கிடையாது என்று தேவனுடைய பிள்ளைகள் சொன்னார்கள். இப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகளைக் கேட்பது என்ன வகையில் சேர்த்தி? அப்படியானால் மதம் மாறியதால் சமூகத்தில் சமநிலையில் மதிக்க படவில்லையா? அதாவது இதுவரை மதம் மாறியதற்குச் சொன்ன காரணங்கள் பொய் என்பதுதானே நிஜம்?தலித் மக்களுக்கான சலுகைகள் ஹிந்துக்களுக்கு மட்டுமே கொடுக்கப் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-ஜன-202020:36:18 IST Report Abuse
S.Baliah Seer ஆமாம் வசதி உள்ளவர் வசதி இல்லாதவர் என்ற பேதம் இல்லாமல் தமிழக அரசு 1000 ரூபாயோடு பொங்கல் பரிசு கொடுக்கிறதே.இதைப்பற்றி யாரும் வாய் திறக்காதது ஏன் .அரசு ஊழியர் சம்பளம் உயர்த்தக்கோரி போராட்டம் நடத்தினால் மட்டும் உடனே வரிந்து கட்டிக்கொண்டு இப்பகுதியில் வாயார திட்டுகிறீர்கள்.தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடும் தொகையும்,இனாம் தொகையான 50 ஆயிரம் கோடி ரூபாயும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளதே.உழைத்தவன் கேட்டால் கோபப்படுகிறவர்கள் .உழைக்காதவனுக்கு தண்டமாக கொடுப்பதை கண்டுகொள்வதில்லையே ஏன்.பிச்சைக்கார தனத்தை ஊக்குவிப்பது அரசு.1000 ரூபாய்க்கு கையேந்துபவர்கள் இருக்கையில் சாதி கோட்டாவை எப்படி விடுவார்கள்/
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
10-ஜன-202013:54:54 IST Report Abuse
கல்யாணராமன் சு.சிலது சரியானவை . சிலது தவறானவை .பொங்கல் பரிசு, மக்களை மகிழ்விக்க, அரசு மற்ற மக்களின் வரிப்பணத்தை எடுத்து செலவு செய்யும் ஏமாற்று வேலை .வாங்குபவர்கள் இதை பெறுவதன் மூலம் பிச்சைக்காரர்களாக ஆக்கப்படுகின்றனர் . இதில் சந்தேகமே இல்லை . ஆனால் "உழைத்தவன்" என்று அரசுவேலை பார்ப்பவர்களை சொல்வது மிகவும் நெருடுகிறது . முக்கால்வாசி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் என்பது பாக்கெட் பணம் போலத்தான். அரசு துறைகளில் எந்த வேலை செய்வதற்கும் லஞ்சம் கொடுக்கவேண்டும் ...............
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
09-ஜன-202020:30:21 IST Report Abuse
Ram மதம் மாறும் அளவுக்கு யோசிக்கத்தெரிஞ்சவங்களுக்கு அவர்களது பொருளாதார நிலையை மேன்மை படுத்தும் அளவுக்கு அறிவில்லையா , எப்பப்பாத்தாலும் எல்லாம் ஓசியில் வேண்டும் என்கிறார்களே , அறிவில் சிறந்தவர்கள் வயிற்றில் ஏன் அடிக்கிறார்கள் , கேட்டால் அந்தக்காலத்து கதையை ஆரம்பித்துவிடுவார்கள் ,
Rate this:
Share this comment
set.senthamizh - tamilnadu,இந்தியா
13-ஜன-202007:50:03 IST Report Abuse
set.senthamizhதாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம் பள்ளிகளில் இலவச நோட்டு புத்தகம் இதன் மதிப்பு 50 ருபாய் , வேலை வாய்ப்புகளில் மதிப்பெண் வரம்பு குறைவு அனால் , கொடுக்கப்படும் 18 % விகிதத்தில் மற்ற சமூகத்தினர் எடுக்கும் மதிப்பெண்ணை விட குறைவாக எவரும் எடுப்பதில்லை அனால் , அரசியல் சட்டத்தின்படி இடவொதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு வாழ்வாதார பாதுகாப்புதானே தவிர மற்றபடி ஒன்றுமில்லை தலித் கிருத்துவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான அந்தஸ்து வழங்குவது வரவேற்கத்தக்கது.........
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
18-ஜன-202011:53:59 IST Report Abuse
Jaya Ramஅப்படியானால் உங்கள் தகுதி உயர்த்தியுள்ளீர்கள் அல்லவா, ஆகையினால் சலுகைகளை அனைவருக்கும் ரத்துசெய்துவிடலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X