குடியுரிமை சட்டத்தை எதிர்த்து யஷ்வந்த் சின்கா 3000 கி.மீ., யாத்திரை

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (79)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று (ஜன.,09) துவங்கி, மும்பை முதல் டில்லி வரை 3000 கி.மீ., யாத்திரை செல்ல உள்ளார்.


"காந்தி சாந்தி யாத்திரை" என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உ.பி., மற்றும் அரியானா ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இன்று துவங்கும் இந்த யாத்திரை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான ஜன.,30 அன்று டில்லி ராஜ்காட்டில் முடிவடைய உள்ளது. தேசியவாத காங்., கட்சியின் தலைவர் சரத் பவார், தெற்கு மும்பையில் இந்த யாத்திரையை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். இந்த யாத்திரையில் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், டில்லி ஜே.என்.யு., வன்முறை தாக்குதலுக்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படாது என பார்லி.,யில் உறுதி அளிக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த யாத்திரை செல்லப்படுவதாக கூறப்படுகிறது. யஷ்வந்த் சின்காவுடன், மஹா., முன்னாள் முதல்வர் ப்ருத்விராஜ் சவ்கான், முன்னாள் எம்.பி., சத்ருகன் சின்கா, விதர்பா காங்., தலைவர் ஆசிஷ் தேஷ்முக் ஆகியோரும் யாத்திரை செல்ல உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-ஜன-202023:49:17 IST Report Abuse
Rajagopal அப்புடியே நடந்துக்கிட்டே போனீங்கன்னா நம்ம பாகிஸ்தான் வந்துரும். உள்ள போயி அங்கிட்டே இருந்துக்கிடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
09-ஜன-202022:11:06 IST Report Abuse
Krishna TOO MUCH FALSE PROPAGANDA & UTTER-WASTE PROTESTS To Fool People (who Cannot be Fooled Any More). NRC-NATIONAL REGISTRY OF CITISENS IS MUST TO WEED-OUT LARGE OF FOREIGN INFILTRATORS (BUT WHY AADHAR WAS FORCED For Each & Every Silly Things Genuine Citisens Being Harassed Extremely Has Any Officials Issuing Aadhar to Many Foreign Infiltrators & Enjoying Govt Freebies Ever- Punished by Aadhar Mentals (Modi-Shah & Co). CAA IS NOT AT ALL ANTIINDIAN MINORITIES (Muslims Etc) BUT CAA IS NOT AT ALL REQUIRED (Persecuted Refugees esp. Hindus be Granted Full-Fledged Asylum Till Seperate Country with Equivalent % of that Country’s Land as that of their Population at 1946 (or PreIslamic Invasions-100%) is d as Ultimate Solution in such Terrorising Situations, (like Bangladesh d by Great Indira). Hence, all Parties & Their Vested Supporters (all incl. Students, Bollywood etc etc) Must CONCENTRATE on MORE BURNING ISSUES LIKE GRAVE PEOPLE HARASSMENTS By IDIOTIC-MENTAL ANTIPEOPLE DICTATORS Compelling AADHAR Spy tem For Each & Every Silly things Destroying People's Peaceful Living- Industrial-Commercial Activities & ECONOMY, GRAVE UNEMPLOYMENT, ANTI-PEOPLE POWER-MISUSING & VVVwasteful OFFICIALS (All incl. Police & Judges) & ANTIPEOPLE JUSTICE (VVVslow, Non-Neutral-ProRuler-ProPolice-ProMedia-ProSrAdvocates Biased Judges, Poor-Quality Flexi Judgements, Unwanted Procedures & VVCostly Litigations.
Rate this:
Share this comment
Cancel
K Palani - Vellore,இந்தியா
09-ஜன-202021:18:03 IST Report Abuse
K Palani செய்திதாளே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X