சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பிளாஸ்டிக் இல்லாத பேஸ்ட்!

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிளாஸ்டிக், plastic, பேஸ்ட், paste, அறிவியல், science

பல் துலக்க உதவும் பற்பசை மற்றும் பிரஷ் ஆகியவை இரண்டும் பிளாஸ்டிக் இல்லாமல் தயாரிக்க முடியுமா? கனடாவை சேர்ந்த சேன்ஜ் டூத்பேஸ்ட், அதை சாதித்திருக்கிறது. வீடுதோறும் இருக்கும் பற்பசை குழாய்களை அகற்றுவதுதான் அதன் நோக்கம்.

இதற்கென பல வடிவங்களில் பரிசோதித்து, கடைசியில் மாத்திரை வடிவில் பற்பசையை தயாரித்துள்ளது சேன்ஜ். இதில் ஒரு மாதிரியை எடுத்து வாயில் போட்டு, சற்றே தண்ணீரை வாயில் தேக்கிக் கடித்து, பிரஷ் செய்தால் உடனே பற்பசை போல நுரை வாயில் கொப்பளிக்கும்.
இந்த மாத்திரையில் செயற்கை வேதிப் பொருள் எதுவும் இல்லை என இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பல் துலக்கும் பிளாஸ்டிக் பிரஷ்ஷுக்கு மாற்றாக மூங்கில் நார்களையும் மூங்கில் கைப்பிடியும் கொண்ட இயற்கை பிரஷ்ஷையும் சேன்ஜ் உருவாக்கியிருக்கிறது.

டன் கணக்கில் குப்பையில் சேரும் பிளாஸ்டிக் பேஸ்ட் குழாய்களையும், பிஷ்களையும் இனி நிச்சயம் தவிர்க்க முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
12-ஜன-202006:26:18 IST Report Abuse
Rangiem N Annamalai ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என நமது முன்னோர்கள் கண்டுபிடித்த இடத்திற்கு வந்து விட்டோம். வேப்ப மரம் ஆல மரம் பல் துலக்கும் குச்சிக்காக வளர்க்க போகிறோம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X