மாணவர்களால் சிறை வைக்கப்பட்ட பா.ஜ., எம்.பி.,

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (33)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா : மேற்குவங்கத்தின் சாந்திநிகேதனில் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கி பேச வந்த பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., ஸ்வப்பன் தாஸ் குப்தாவை, விஷ்வ பாரதி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் 6 மணி நேரம் சிறை பிடித்து வைத்தனர்.





குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவற்றை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நேற்று (ஜன.,08) நடத்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக விஷ்வ பாரதி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

இந்த சமயத்தில், குடியுரிமை சட்டம் குறித்து விளக்க உரையாற்ற பா.ஜ., எம்.பி.,க்கு துணைவேந்தர் அழைப்பு விடுத்திருந்தார். அவரை எதிர்த்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.





போராட்டம் நடந்து கொண்டிருந்த போது எம்.பி., ஸ்வப்பன் தாஸ் குப்தா பல்கலை., வளாகத்திற்கு வந்தார். குடியுரிமை சட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கூறக் கூடியவரை அழைக்காமல் பா.ஜ., செய்தி தொடர்பாளரை அழைத்ததால் கோபமடைந்த மாணவர்கள், பா.ஜ., எம்.பி.,யை சுமார் 6 மணி நேரம் சிறைபிடித்து வைத்தனர்.

பல்கலை., நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகு இரவு 9 மணியளவில், தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்வப்பன் தாஸ் விடுவிக்கப்பட்டார். பா.ஜ., தலைவர்கள், மேற்குவங்க கவர்னர் உள்ளிட்டோர் இச்சம்பவத்திற்கு கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
09-ஜன-202023:06:39 IST Report Abuse
kumzi மூர்க்க கூட்டத்தின் அடியாட்கள்
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
09-ஜன-202019:41:13 IST Report Abuse
sankar மமதையின் வன்முறை வெறியாட்டம்
Rate this:
Share this comment
Cancel
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
09-ஜன-202018:59:04 IST Report Abuse
Vasu They don't represent all students of the University. These are the Communist Party aligned students.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X