3000 தேசத்துரோக வழக்கு 'வாபஸ்': ஜார்க்கண்ட் முதல்வர் பரிந்துரை

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (17)
Advertisement
Jharkhand, CM, HemantSoren, CAA, Protest, Drop, SeditionCharges, ஜார்க்கண்ட், முதல்வர், ஹேமந்த்சோரன், குடியுரிமைசட்டம், தேசத்துரோக, வழக்கு, வாபஸ்

இந்த செய்தியை கேட்க

தன்பாத்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய 3000 பேர் மீதான தேசத்துரோக வழக்கை கைவிட மாநில நிர்வாகத்திடம் பரிந்துரை செய்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.




ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத், வஸ்ஸெய்பூர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜன.,07ம் தேதி, ஏராளமானோர் பேரணியில் ஈடுபட்டனர். அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டதாக 3000 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகளை கைவிட வேண்டும் என மாநில நிர்வாகத்திடம் முதல்வர் ஹேமந்த் சோரன் பரிந்துரை செய்துள்ளார்.




இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மக்களை பயமுறுத்துவதற்கும் மவுனமாக்குவதற்கும் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை தூண்டுவதாக அமைய வேண்டும். எனது அரசாங்கம் மக்களின் குரலாக செயல்படும். 3,000 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குகளை திரும்பப் பெற நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜார்க்கண்ட் மாநில மக்கள், சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பது அவர்களின் கடமை என நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-ஜன-202016:06:42 IST Report Abuse
ஆரூர் ரங் ஜார்கண்டில் யார் வேண்டுமானாலும் எத்தனைபேர் வேண்டுமானாலும் வந்து குடியேறலாம் நிலங்கள் வாங்கலாம் என ஆணையிடுவீரா? பாகிஸ்தான் அகதிகளுக்கு இலவச புகலிடம் கொடுக்க மலைசாதியினரிடம் கேட்டுப்பாருங்களேன் பின்னிப்பெடலேடுத்துடுவாங்க
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
09-ஜன-202015:34:16 IST Report Abuse
Siva நீங்கள் சொல்லா விட்டாலும் ஜார்கண்ட் மக்கள் சட்டம் ஒழுங்கு கடைபிடிப்பார்கள்.. பிரச்சனை வெளி நாட்டில் இருந்து வந்த வந்தேறிகள்.. அது தெரியாத ஒரு முதல்வர்.. தேசம் நாசமாகட்டும்.. நாம் ஊரார் பணத்தை ஊழல் செய்து ஊஞ்சலில் ஆடுவோம்....
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
09-ஜன-202014:50:48 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா சாருக்கு 'சிறுபான்மையினரின் காவலன்' பதக்கம் பார்சல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X