அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரின் பெயரை, துறையை மாற்றி 'உளறிய' பெண் அமைச்சர்

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரையும், அவரது துறையையும், விழாவில் கலந்து கொண்டு பேசிய சக அமைச்சரான சரோஜா மாற்றி, மாற்றி கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news




சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் அரசு சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா உள்ளிட்டோரும், அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என்பதற்கு பதிலாக , மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெயக்குமார் என தவறுதலாக கூறிவிட்டு பின்னர் சுதாரித்துக்கொண்டு தவறை திருத்தினார்.


latest tamil news



பின்னர் , அமைச்சர் ஜெயக்குமார் என்பதற்கு பதிலாக ஜெயராமன் என மீண்டும் தவறுதலாக கூறினார். இதனைக் கேட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சிரித்தனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், "பசி மயக்கமா" என கேட்க, அமைச்சர் சரோஜாவும் "ஆம் பசி" என பதிலளிக்க அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
அதே சமயம், அமைச்சராக இருக்கும் சரோஜாவுக்கு, சக அமைச்சரின் பெயரும், துறையும் கூட தெளிவாக தெரியவில்லையே என விழாவில் கலந்து கொண்டவர்கள் முணுமுணுத்து சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
10-ஜன-202009:18:29 IST Report Abuse
arudra1951 பெண் வளர்த்து விட்ட பெண்
Rate this:
Cancel
Velu Karuppiah - Chennai,இந்தியா
10-ஜன-202007:01:48 IST Report Abuse
Velu Karuppiah இவங்களை எல்லாம் தேர்ந்து எடுத்து பல லட்சம் புழங்கும் துறைகளை கொடுத்த நம் மக்களைத்தான் குறை சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஜன-202005:45:26 IST Report Abuse
D.Ambujavalli அவருடைய துறை நினைவிருக்கிறதா கேளுங்கள் முதலில் வர வேண்டியது எங்கிருந்து, இந்தத் துறையிலிருந்து வந்தால் என்ன? வாங்கிப் போட்டுக்கொண்டு போவதற்கு மேல் என்ன தெரிந்து என்ன ஆகப்போகிறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X