பொது செய்தி

இந்தியா

சுலைமானியை கொன்ற விமானம்: இந்தியா வாங்குகிறது

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement

புதுடில்லி : ஈரான் ராணுவ தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்திய எம்.கியூ.9 ரீப்பர் ( MQ 9 Reeper) ரக ஆளில்லா விமானத்தை வாங்கும் இந்தியாவின் நீண்ட நாள் முயற்சி விரைவில் கைகூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



50,000 அடி உயரம் வரை பறந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்த ஆளில்லா விமானங்களை அமெரிக்காவின் ஜெனரல் அட்டோமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஆளில்லா விமானங்களால் 27 மணி நேரம் தொடர்ச்சியாக பறக்க முடியும். ஒபாமா அமெரிக்க அதிபராக முதல் முறை இருந்த போதே இந்த ஆளில்லா விமானங்களை வாங்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இந்த முயற்சி கைகூடாமல் போனது.


latest tamil news


இந்த நிலையில் தலா ரூ.460 கோடியே 70 லட்சம் விலையில், 10 ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் எந்த இலக்கையும் தாக்குவதுடன், சீன எல்லைப்புறங்களில் நமது பாதுகாப்பை அதிகரிக்கவும் இவை உதவியாக இருக்கும் என இந்தியா கருதுகிறது.

இதனால் உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிக்கவும், எல்லைப் பகுதி பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த ஆளில்லா விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
15-ஜன-202013:09:01 IST Report Abuse
மணி நமது எல்லைப்பகுதியில் ஆக பெரியது 22716 கிலோமீட்டர் நீளமுடையது. ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒன்று என்று வைத்தால்கூட 22-23 தேவை. ஒரு நாற்பதை வாங்கிப்போடுங்கள் பாத்துக்கலாம். நிதிப்பற்றாக்குறையென்றால் அரசியல்வியாதிகலின் கள்ள சேமிப்பை பிடுங்கி எடுத்து அரசு நிதியில் போட்டுக்கொள்ளவும்.
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
12-ஜன-202020:10:41 IST Report Abuse
Sundar This will help India to destroy the infiltrators and terrorist training camps in Pakistan. good decision.
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
10-ஜன-202009:03:22 IST Report Abuse
PANDA PANDI இந்த விமானத்தை அரசியலில் புகுத்த பிசேபி திட்டம். உளவுபார்க்க..உங்க தில்லாலங்கிடி வேலை தெரியும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X