தாவூத் இப்ராஹிம் கூட்டாளி கைது

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (14)
Advertisement
EjazLakdawala, ChhotaRajan, DawoodIbrahim, Arrested, Mumbai, லக்தாவாலா, சோட்டாராஜன், தாவூத்இப்ராஹிம், மும்பை, கைது

இந்த செய்தியை கேட்க

பாட்னா: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனின் விசுவாசி எஜாஸ் லக்தாவாலா, பாட்னாவில் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர்; 700க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரின் கூட்டாளியாக முன்பு இருந்த சோட்டா ராஜன், இந்த தாக்குதலை விரும்பாததால் தாவூத்துக்கு எதிரியானார். சோட்டா ராஜனின் விசுவாசியாக இருந்த எஜாஸ் லக்தாவாலா மீ்து மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 27க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.





இவர், 2003ம் ஆண்டு தாவூத் கூட்டாளிகளால் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அவர் கனடா தப்பி சென்றார். இந்நிலையில், தலைமறைவான லக்தாவாலா, பாட்னாவிற்கு அடிக்கடி வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று (ஜன.,08) இரவு 10:30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவருக்கு ஜன.,21 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
10-ஜன-202007:25:18 IST Report Abuse
sridhar கோலம் போட்டு திமுக கும்பல் எதிர்ப்பு காட்டட்டும். அப்போ தான் மத்திய அரசுக்கு புத்தி வரும். வரிசையா எல்லா பச்சை தீவிரவாதிகளையும் பிடித்துவிட்டால் யார் இவர்களுக்கு ஓசி பிரியாணி தருவார்கள் ? இது என்ன நியாயம்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
09-ஜன-202019:13:14 IST Report Abuse
Subramanian Arunachalam நிச்சயம் ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும் . திருமதி மம்தா அவர்கள் இந்த கைதிக்கு ஊக்க தொகையாக ஒரு ஐந்து கோடி ருபாய் கொடுப்பதாக அறிவிப்பு செய்து சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளை அள்ளுவார் என்று எதிர்பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
09-ஜன-202018:01:30 IST Report Abuse
natarajan s இப்படித்தான் அபு சலீம் என்பவருக்கு இங்கு மரண தண்டனை கொடுக்கமாட்டோம் என்று சொல்லி extradite செய்து கூடி வந்து fake passport case போட்டு பிரியாணி கொடுத்து ஆர்தர் ரோடு சிறையில் நன்றாக கவனிக்கப்பட்டு வருகிறார், அதுபோல் இவரும் பத்திரமாக பார்த்து கொள்ள படுவார் , இந்திய ஒரு தார்மீக நாடு, யார் வேண்டுமானாலும் இங்கு வந்து முன்னாள், இந்நாள் பிரதமரை கொன்றாலும், நாங்கள் அவர்களை அப்பாவியாக்கி அவர்களை சிறை வைத்ததே தவறு என்று போராடுவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X