நாட்டில் அதிகரிக்கும் வன்முறை: தலைமை நீதிபதி கவலை

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (33)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நாடு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வன்முறைகள் அதிகரிக்கின்றன என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே வருத்தம் தெரிவித்துள்ளார்.






குடியுரிமை திருத்த சட்டம், சட்டரீதியானது என அறிவிக்க வேண்டும் எனவும், இந்த சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் மீடியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் வினீத் தந்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.




அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி பாப்தே, பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எங்களால் எப்படி சட்டரீதியானது என அறிவிக்க முடியும்? இது எப்போதும் அரசியலமைப்பின் அனுமானமாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் சட்டம் படித்தவர்கள் என்ற முறையில் இது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு சட்டம் செல்லுபடியாகுமா என்பதை விவரிப்பது மட்டுமே கோர்ட்டின் வேலை. சட்டரீதியானது என அறிவிப்பது அல்ல.




நாடு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அமைதி நிலை நாட்ட முயற்சி செய்யுங்கள். இது போன்ற மனுக்கள் அமைதியை கொண்டு வர உதவாது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு இல்லை என்பதையும் இது எந்த இந்திய குடிமகனுக்கும் எதிரானது அல்ல என்பது பற்றியும் விளக்கம் அளித்த மத்திய அரசிற்கு அறிவுறுத்தல் வழங்கும் படி மனுதாரர் கேட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
09-ஜன-202022:53:24 IST Report Abuse
Krishna TOO MUCH FALSE PROPAGANDA & UTTER-WASTE PROTESTS To Fool People (who Cannot be Fooled Any More). NRC-NATIONAL REGISTRY OF CITISENS IS MUST TO WEED-OUT LARGE OF FOREIGN INFILTRATORS (BUT WHY AADHAR WAS FORCED For Each & Every Silly Things Genuine Citisens Being Harassed Extremely Has Any Officials Issuing Aadhar to Many Foreign Infiltrators & Enjoying Govt Freebies Ever- Punished by Aadhar Mentals (Modi-Shah & Co). CAA IS NOT AT ALL ANTIINDIAN MINORITIES (Muslims Etc) BUT CAA IS NOT AT ALL REQUIRED (Persecuted Refugees esp. Hindus be Granted Full-Fledged Asylum Till Seperate Country with Equivalent % of that Country’s Land as that of their Population at 1946 (or PreIslamic Invasions-100%) is d as Ultimate Solution in such Terrorising Situations, (like Bangladesh d by Great Indira). Hence, all Parties & Their Vested Supporters (all incl. Students, Bollywood etc etc) Must CONCENTRATE on MORE BURNING ISSUES LIKE GRAVE PEOPLE HARASSMENTS By IDIOTIC-MENTAL ANTIPEOPLE DICTATORS Compelling AADHAR Spy tem For Each & Every Silly things Destroying People's Peaceful Living- Industrial-Commercial Activities & ECONOMY, GRAVE UNEMPLOYMENT, ANTI-PEOPLE POWER-MISUSING & VVVwasteful OFFICIALS (All incl. Police & Judges) & ANTIPEOPLE JUSTICE (VVVslow, Non-Neutral-ProRuler-ProPolice-ProMedia-ProSrAdvocates Biased Judges, Poor-Quality Flexi Judgements, Unwanted Procedures & VVCostly Litigations.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-ஜன-202021:07:02 IST Report Abuse
தாண்டவக்கோன் //நாடு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. // தேச துரோக கூட்டத்தானுங்களுக்கு செருப்படி
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-ஜன-202020:12:38 IST Report Abuse
S.Baliah Seer பொதுநல வழக்குகளை சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும். நீதி மன்றங்களின் நேரத்தை இவை வீணடிக்கின்றன.சும்மா ஒரு பாப்புலாரிட்டிக்காக இதுபோன்ற வழக்குகளை போடுகிறார்கள்.யாரோ ஒருவர் பொதுநல வழக்கு என்று ஹெல்மட் போட சொல்லி உச்சநீதி மன்றத்தில் மனு போட்டதால் இன்று பல வாகன ஓட்டிகள் ஹெல்மட் போடுவதால் பல விபத்துக்குள்ளாகிறார்கள்.வாகனம் ஓட்டும்போது ஒரு மனிதன் தலையில் தேவையற்ற ஒரு சுமை எதற்கு. டிராபிக் ராமசாமி கட்டவுட்டுகளை தடை செய்ய பலமுறை பொதுநல மனு போட்டும் ஒன்றும் நடக்கவில்லை.கட்டவுட்/பேனரால் மோட்டார்சைக்கிளில் ஒரு பெண் உயிரிழந்தவுடன்தான் அரசு விழித்தது.போராட்டங்களை தடை செய்ய சொல்லி நீதி மன்றம் செல்வோர் உலகிலேயே இந்தியர்தான்.பொது சொத்திற்கு ஊறுவிளைவிக்காமல் போராடுவது தொழிலாளிகளின் அடிப்படை உரிமை. யாரோ ஒருவர் தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நீதிமன்றம் செல்வது ஏற்க முடியாதது.கம்பெனிகளில் குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இதை தடுக்க பொதுநல மனு போட முடியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X