எண்பது வருட பொக்கிஷம் எனது கோலக்குழாய்

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020
Share
Advertisement



latest tamil news



சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சுவாமிகளை வரவேற்று தெரு முழுவதும் பெண்கள் கோலமிட்டுக் கொண்டு இருந்தனர்.


latest tamil news


அந்த பெண்களில் ஒருவரான பாலா என்பவர் அந்தக்காலத்தில் உபயோகிக்கும் கோலக்குழாயை உபயோகித்து வேகவேகமாகவும் நேர்த்தியாகவும் கோலமிட்டுக் கொண்டு இருந்தார்.


latest tamil news


பழைய காலத்தில் பாண்ட்ஸ் பவுடர் டப்பா போன்ற பழைய தகரங்களில் விதவிதமாக துளையிட்டு பின் குழாய் போல உருட்டி விற்பர். இதை வாங்கும் பெண்கள் இதற்குள் கோலமாவை நிரப்பி தரையில் உருட்டினால் போதும் கோலம் ரெடியாகிவிடும்.

இப்படிப்பட்ட கோலக்குழாயை உருட்டி கோலமிட்ட பின் அந்தக்குழாயை மிக பத்திரமாக பணம் வைப்பது போல தனது கைப்பைக்குள் வைத்துக் கொண்டார். கேட்ட போது இது என் மாமியாருக்கு அவரது மாமியார் பரிசாக கொடுத்தது.எண்பது வருடத்திற்கு முன்பாக திருப்பதி போயிருந்த போது இரண்டு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் இந்த குழாயை.

என் மாமியார் இந்தக் குழாயின் கதையைச் சொல்லி நான் கோலமிடுவதில் ஆர்வமாக இருப்பதால் எனக்கு பரிசாக கொடுத்தார்,ஆகவே இதை நான் மிக பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். இதுவரை இதில் எந்தப்பிரச்னையும் வந்தது இல்லை, இப்போது இது போல வருவதும் இல்லை. எனக்கு பல இடங்களில் பாராட்டையும் பரிசையும் வாங்கிக் கொடுத்துள்ள ராசியான கோலக்குழாய் இது என்றார் பெருமிதமாக...

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X