சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நட்சத்திர மோதல் கிளப்பிய அலை!

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
star, நட்சத்திரம், அலை, science அறிவியல்

இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதி ஒன்றானபோது, காலவெளியில் ஏற்பட்ட புவியீர்ப்பு அலைகளை, அண்மையில் விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள, 'லிவிங்ஸ்டன் லிகோ ஆராய்ச்சி நிலையம், இந்த புவியீர்ப்பு அலைகளை கடந்த ஏப்ரல் 2019ல் பதிவு செய்துள்ளது.

பூமியிலிருந்து, 52 கோடி மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த மோதலும் இணைப்பும் நிகழ்ந்துள்ளது. இணைந்து உருவாகிய புதிய நியூட்ரான் நட்சத்திரம் சூரியனைவிட, 3.4 மடங்கு நிறை கொண்டது என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்

அண்டவெளியில் இரண்டு பெரிய கோள்கள், நட்சத்திரங்கள் மோதும்போது, சுற்றியுள்ள காலவெளியில் அலைகள் ஏற்படுகின்றன. இவற்றை விண்வெளி ஆய்வாளர்கள் புவியீர்ப்பு அலைகள் என்று அழைக்கின்றனர். ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்த அலைகள் பூமியை வந்து அடையும்போது, அவற்றை சில கி.மீ., நீளமுள்ள, 'லிகோ' என்ற கருவி மூலம் அளக்கின்றனர். ஏற்கனவே, 2015 முதல், சில டஜன் புவியீர்ப்பு அலைகளை, உலகில் சில நாடுகளில் உள்ள லிகோ கருவி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gsanky - Bangalore,இந்தியா
16-ஜன-202006:22:25 IST Report Abuse
Gsanky 52 கோடி மில்லியன் ஒளி ஆண்டுகள் என்பது தவறு. அது பிரபஞ்சத்தின் விட்டத்தை விட பல மடங்கு அதிக தூரம். 52 கோடி ஒளி ஆண்டுகள் என்பது தான் சரி. அத்தனை தூரத்திலிருந்து 52 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புவியீர்ப்பு அலைகள் இப்போது தான் பூமியை எட்டியுள்ளது மற்றும் அதை மனிதன் பதிவு செய்துள்ளான் என்பது ஆச்சர்யமான விஷயம்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
11-ஜன-202023:41:43 IST Report Abuse
oce அதென்ன வெளிநாட்டு விஞ்ஞானிகளால் தான் இதை எல்லாம் கண்டு பிடிக்க முடியுமா. இந்திய விஞ்ஞானிகளால் முடியாதா. அந்த வசதி இந்தியாவில் இல்லையா அல்லது பூமியில் பாயும் நியுடெரான்களின் மோதல் அலைகள் வெளிநாடுகளில் தான் பூமியில் விழுமா. இந்தியாவுக்குள் விழாதா.ஒரு ஒளி ஆண்டுக்கு எத்தனை கிமீ தொலைவு என அவர்கள் வரையறை செய்துள்ளனரா. இத்தனை ஒளியாண்டு என்று மேம்போக்காக புள்ளி விவரம் தருதல் கூடாது. . .
Rate this:
kannan - Bangalore,இந்தியா
14-ஜன-202014:39:07 IST Report Abuse
kannanஅதற்கு நம்ம ஊரு ஞானசூன்யங்கள் ஒப்புதல் தரணுமே.. எந்த புது ப்ராஜெக்ட் வந்தாலும் நம்ம ஆளுங்க ஒதுக்க மாட்டாங்க. நியூட்ரினோ observatoryகும் எவ்வளவு எதிர்ப்பு? அடுத்து satellite launch pad தமிழ்நாட்டுக்கு வரணும் பேசிக்கறாங்க. அதுக்கு எதனை பேர் கொடி தூக்குவாங்கனு தெரியல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X