ரீ-டுவிட் செய்தோருக்கு ரூ.65 கோடி பரிசு: ஜப்பான் கோடீஸ்வரர் தாராளம்

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (7)
Advertisement

இந்த செய்தியை கேட்க

டோக்கியோ: ஜப்பானில் கோடீஸ்வரர் ஒருவர், டுவிட்டரில் தனது பதிவை ரீ-டுவிட் செய்தவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.65.3 கோடி பரிசு அளிக்கப்போவதாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.





டுவிட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் ஒருவர் பதிவிடும் கருத்துகளை மற்றவர்கள் ரீ-டுவிட், ஷேர் செய்வதன் மூலம் அந்த கருத்துகள் பகிரப்படுமே தவிர, பகிர்ந்தவர்களுக்கு அதனால் ஒரு லாபமும் கிடைக்கப்போவது இல்லை. அப்படி இருக்கையில், ரீ-டுவிட் செய்தவர்கள் லட்சாதிபதியானால் எப்படி இருக்கும் என கனவு கூட கண்டிருக்க மாட்டோம். ஆனால், அதனை ஜப்பானை சேர்ந்த தொழில் அதிபர், செய்து காண்பித்துள்ளார். ஆம், அவரின் டுவிட்டர் பதிவை ரீ-டுவிட் செய்தவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் (மொத்தம் ரூ. 65 கோடி) பரிசாக கொடுக்க உள்ளார்.




ஜப்பானை சேர்ந்த பிரபல ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியான சோசோ (zozo) நிறுவனர் யுசகு மேசவா. கோடீஸ்வரரான இவர், எப்போதும் வித்தியாசமான அணுகுமுறையை சோதனை செய்வதில் ஈடுபடுபவர். பணம் இல்லாத உலகம எப்படி இருக்கும் எனவும், தனிமனிதனின் வாழ்வில் பணத்தின் தாக்கம் என்ன எனவும், தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு அதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையாலும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர். மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவுக்கு செல்ல முன்பதிவும் செய்துள்ளார். இவர், திடீரென சமூகம் தொடர்பான சோதனையில் ஈடுபட முற்பட்டார்.




அதன்படி, பணம், குறிப்பிட்ட நபர்களை எந்த அளவு மகிழ்ச்சையை ஏற்படுத்துகிறது என்பதை அறிய, தனது டுவிட்டர் பக்கத்தில், ஜன.,05ம் தேதி பதிவிட்ட டுவிட்டை தன்னை பின்தொடர்பவர்கள் ரீ-டுவிட் செய்தால் அதில் குறிப்பிட்ட பேருக்கு 1 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.65.3 கோடி) பரிசாக அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். பரிசு என்றதும், உலகம் முழுவதும் பலரும் ரீ-டுவிட் செய்தனர். அந்த பதிவு, இதுவரை 41.41 லட்சம் ரீடுவிட் மற்றும் 14.04 லட்சம் லைக்ஸை பெற்றுள்ளது. இதில் 1000 பேரை தேர்ந்தெடுக்கும் யுசகு, அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் பணத்தை பரிசாக வழங்க இருக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
10-ஜன-202010:23:20 IST Report Abuse
R. Vidya Sagar இதைப்பார்த்துட்டு வாட்சப்பில் எதையுமே படிக்காமலேயே forward செய்யும் கூட்டம் இன்னும் தீவிரமாக forward செய்ய ஆரம்பிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
09-ஜன-202022:29:45 IST Report Abuse
Vena Suna ஐயோ,எனக்கு அடிக்க கூடாதா அந்த அதிர்ஷ்டம் ?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஜன-202019:19:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாதனை படைப்பாங்களொ 🤔
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X