சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரியில் அனைத்துக்கட்சியினர் ஆர்பாட்டம்

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (3)
Advertisement
வேளச்சேரியில் அனைத்துக்கட்சியினர் ஆர்பாட்டம்

சென்னை: பொது மக்கள் 120 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழியை கிண்டி ஐ.ஐ.டி. நிறுவனம் மூடியதை திறக்க வலியுறுத்தி வேளச்சேரியில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. தேர்தல் அணி மாநில செயலாளர் வேளச்சேரி மணி மாறன் , அ.தி.மு.க. வட்ட சார்பில் சம்பத், துணை செயலர் கண்ணன், திமுக வட்ட செயலர் மதிவாணன், காங்கிரஸ் வட்ட தலைவர் லூயிஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலர் சுமித் , திமுக நிர்வாகிகள் பத்மராஜன், சாரதி, பேராசிரியர் பரசுராமன் , வேளச்சேரி கிராம நலச்சங்க நிர்வாகி தியாகராஐன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 120 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்த வழியை மூடியது தவறு. இதனை உடனடியாக திறக்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துவோம் . அதற்கும் செவி சாய்க்க வில்லை என்றால் டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மணிமாறன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-ஜன-202019:38:20 IST Report Abuse
Natarajan Ramanathan டில்லியில் போராட்டம் செய்தும்.......பலன் இல்லை என்றால் கராச்சியில் செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
Yuva Rajan - chennai,இந்தியா
09-ஜன-202018:43:37 IST Report Abuse
Yuva Rajan இவனை வழில படுக்க வச்சு பொது வழியை திறந்து விடுங்க
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-ஜன-202017:42:44 IST Report Abuse
Natarajan Ramanathan அது பொது வழி அல்ல. இப்போதும் நடந்து செல்பவர்களுக்கு எந்த தடையும் இல்லை. வாகனங்களில் வருபவர்களால் தினமும் பாதுகாப்பு பிரச்சினை வருவதால் இந்த நடவடிக்கை வரவேற்க வேண்டியதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X