அரச பொறுப்பு வேண்டாம்: இளவரசர் ஹாரி தம்பதி முடிவு

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (19)
Advertisement
England, PrinceHarry, RoyalFamily , Meghan, இளவரசர், ஹாரி, இங்கிலாந்து, அரசகுடும்பம், அரசபொறுப்பு

இந்த செய்தியை கேட்க

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், இளவரசருமான ஹாரி, ஹாலிவுட் நடிகையான மேகன் மார்க்கலை கடந்த 2018 ம் ஆண்டு மே 19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர், பல்வேறு நாடுகளுக்கு சென்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஏழை மக்களுக்கு உதவி வந்தனர்.




இங்கிலாந்தை பொறுத்தவரை, அரச குடும்பத்தினர், அரசின் அங்கமாக கருதப்படுவார்கள். அரசு எடுக்கும் முடிவுகளில் அவர்களின் பங்கு இருக்கும். இந்நிலையில், அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து, ஹாரி-மேகன் தம்பதி விலகுவதாக அறிவித்துள்ளனர்.




இது தொடர்பாக அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பல மாத ஆலோசனைக்கு பிறகு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம். ஆனால், இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் தேவையான எங்களின் உதவிகள் எப்போதும் தொடரும்.

இனி, இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்களின் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளோம். இதனால், குடும்பத்திற்கு அதிக கவனம் செலுத்த முடியும். நாங்கள் புதிய தொண்டு நிறுவனம் தொடங்க இருக்கிறோம். இதுபற்றி விரைவில் முழு விவரத்தை தெரிவிப்போம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பதிவிட்டுள்ளனர். இளவரசரின் இந்த முடிவு, அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜன-202012:57:27 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அந்த பொறுப்பிற்கு ஜப்பான் நாட்டு துணை முதல்வர் விண்ணப்பிக்கலாமா ? அவருக்கு ஆதரவாக அங்கே பலகோடி ஓட்டுகள் உள்ளன.
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
10-ஜன-202000:47:43 IST Report Abuse
G.BABU அரச குடும்பத்தில் இருந்து வராத இந்த முன்னாள் நடிகை மெகானிடம் வேறு என்ன எதிர்பார்க்கலாம். இந்த பெண்மணியின் அழுத்தமே ஹரி இந்த முடிவெடுக்க காரணம். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.... A lady without royal blood and status
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-202020:56:16 IST Report Abuse
Janarthanan இந்தியாவில் தங்களை அரச குடும்பமாக பாவித்து திரிந்து கொண்டு இருக்கும் இத்தாலிய உறுப்பினர்கள் இதை போல செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
09-ஜன-202023:55:04 IST Report Abuse
dandyபஞ்ச கூட்ட்ங்களக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X