பொது செய்தி

தமிழ்நாடு

43 வது கண்காட்சியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

Added : ஜன 09, 2020
Advertisement
bookexhibition, palanisamy, புத்தகண்காட்சி, முதல்வர், பழனிசாமி, சென்னை, நந்தனம்

சென்னை: சென்வைன நந்தனத்தில் 43 வது புத்தககண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பாண்டியராஜன், செங்கோட்டையன் , கே.பி.,அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் ஜனவரி 21 வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் நவீன இலக்கியம், கணினி, கல்வி தொடர்பான லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 3000 சதுர அடியில் கீழடி கண்காட்சியும், மலர்களால் ஆன திருவள்ளுவர் சிலையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். மாணவர்கள் அனுமதிசீட்டினை அவரவர் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் அல்லாதோர் ரூ 10 செலுத்தி அனுமதிசீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும். சென்னை மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X