பொது செய்தி

தமிழ்நாடு

'ஷாப்பிங்' போன சசிகலாவை கலாய்த்த தர்பார்; அமைச்சரின் அடடே ரியாக்ஷன்?

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (36)
Advertisement
Sasikala,Darbar,Rajinikanth,Rajini,Thalaivar,Superstar,shopping,jail,minister, jayakumar, அமைச்சர்,ஜெயக்குமார்,சசிகலா,தர்பார், ரஜினிகாந்த்,ரஜினி,சிறை,ஷாப்பிங்

இந்த செய்தியை கேட்க

சென்னை: ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில், சிறையிலிருந்து ஷாப்பிங் சென்ற சசிகலாவை கிண்டல் செய்து காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றுள்ளார்.

ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உலக முழுவதும் இன்று(ஜன.,9) வெளியான தர்பார் திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாஸான போலீசாக, பட்டையை கிளப்பியிருக்கும் ரஜினி, இன்றும் அவர் ராஜா தான் என்பதை நிரூபித்துள்ளார். திரைப்படத்தில், சிறை காட்சி ஒன்றில், குற்றவாளி ஒருவர் மொபைல் பயன்படுத்துவது குறித்து போலீசிடம் ரஜினி கேட்க, 'பணம் இருந்தால், ஜெயிலில் இருந்து ஷாப்பிங் கூட போகலாம்' என போலீஸ் கூறுவது போல் வசனம் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிக்கு திரையரங்கில் விசில் பறந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா, சிறையிலிருந்த போதே, 'ஷாப்பிங்' சென்று வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தர்பார் திரைப்படத்தில், இடம்பெற்றிருந்த சிறை காட்சி குறித்து, அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


பணம் இருந்தால்...


அதற்கு சிரித்தபடி பதிலளித்த அமைச்சர், 'தர்பார் பட வசனம் குறித்து நானும் கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் பணம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. பணம் இருந்தால், சிறை கைதி கூட ஷாப்பிங் போகலாம் என தர்பாரில் வசனம் உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்து தான். தர்பார் படத்தையும், பிகில் படத்தையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப, சிறப்பு காட்சிகள் திரையிட, அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan.S - Chennai,இந்தியா
11-ஜன-202016:38:47 IST Report Abuse
Narayanan.S சசிகலாவை பற்றி பேசும் இவர்கள் (மொத்த படக்குழுவும் பணம் முதலீடு செய்தவர்கள் உட்பட) இந்த படத்திற்கான அனைத்து வரவு செலவு கணக்குகளையும் 100 % நேமையாக வெளியிட தயாரா ? தலைவர் ரஜினிக்கும் இது பொருந்தும். நான் எந்த கட்சி சார்ந்தவனும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
11-ஜன-202000:06:09 IST Report Abuse
TAMILAN வந்தேறி ரஜினி தன்னை தமிழன் என்று சொல்லி புறப்பட்டு இருக்கின்றார், சசிகாலா ஏற்கனவே ஜெ,ஜெ விஷயத்தில் யார் யாரோ ஆதாயத்திற்க்காக ஜெ.ஜெ வுக்கு செய்த பாவத்தில் பழிகேடா ஆகி இருக்கின்றார், தன விலகி மற்றும் கணவனை இழந்தார், வந்தேறி ரஜினி ஒரு தமலச்ஜ்யை மட்டுமே தமிழ் நாட்டில் திட்ட முடியும்,, தமிழனை ஆள எத்தனை வந்தேறிகளடா.. கருணாநிதி, ஸ்டாலின், விஷால், ரஜினி, விஜயகாந்த், பாவம் தமிழர்கள்.............
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
10-ஜன-202021:24:09 IST Report Abuse
Sundar The admission by the minister shows that it is also happening in present regime also.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X